விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இறையாய்  நிலன்ஆகி*  எண்திசையும் தான்ஆய்,* 
    மறையாய்  மறைப்பொருள்ஆய் வான்ஆய்* - பிறைவாய்ந்த
    வெள்ளத்து அருவி*  விளங்குஒலிநீர் வேங்கடத்தான்,*
    உள்ளத்தின்உள்ளே உளன்.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மறை அய் - வேதங்களுக்கு ப்ரவர்த்தகனாய்
மறைபொருள் ஆய் - அந்த வேதங்களின் பொருளாயிருப்பவனாய்
வான் ஆய் - நித்ய விபூதி நிர்வாஹகனாய்
பிறை வாய்ந்த  - சந்திரபதத்தைக் கிட்டியிருப்பதும்
வெள்ளம் அருவி - மிக்க ஜலத்தையுடைய அருவிகளினுடைய

விளக்க உரை

இப்படி ஜகத்திலுள்ள பொருள்களெல்லாம் தானேபாயிருக்கும் பெருமான் திருமலையிலேவந்து ஸந்திஹிதனாய்ப்பின்பு என்னுடைய ஹ்ருதயத்தைவிட்டுப் போகிறனில்லை யென்கிறார். இதில் முன்னடிகளிரண்டும் ‘கீழ்ப்பாட்டிற் பொருளின் அநுவாதம். பிறைவாய்ந்த –இது வேங்கடத்திற்கு விசேஷணம், அருகி வெள்ளத்திற்கு விசேஷணமாகவுமாம். சந்திரமண்டலத்தளவும் ஓங்கியிருக்கும்படியைச் சொன்னவாறு. எங்கணும் பேரொலி செய்துகொண்டு பெருகுகின்ற அருவிகள் நிறைந்தும் ஓங்கியுயர்ந்ததுமான திருமலையிலுள்ளவனாய்க்கொண்டு அங்கிருந்து என்னுள்ளத்தில் வந்து சேர்ந்தவனாயின னென்கிறார். “மலைமேல் தான் நின்று என்மனத்துளிருந்தானை“ என்ற திருவாய்மொழியுங்காண்க.

English Translation

The Lord become this Earth, the eight Quarters, the Vedas, the substance of the Vedas, and the lord of tal Venkatam where mountain streams flow rapturously. He stays in my heart.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்