விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தானே தனக்கு உவமன்*  தன்உருவே எவ்உருவும்,* 
    தானே தவ உருவும் தாரகையும்,* - தானே
    எரிசுடரும் மால்வரையும்*  எண்திசையும்,*  அண்டத்து
    இருசுடரும் ஆய இறை.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தாரகையும் - நக்ஷத்ரங்களும்
தானே - அவன்றன் வடிவாகவேயிருக்கும்,
எரி சுடரும் - ஜ்வலிக்கின்ற அக்நியும்
மால் வரையும் - பெரிய குலபர்வதங்களும்
எண் திசையும் - எட்டு திக்குகளும்

விளக்க உரை

எம்பெருமான் பலவடிவுகொண்டு தம்மை அநுபவிக்க விரும்புவதாகக் கீழ்ப்பாட்டில் அருளிச்செய்தார். அவன் ஒரு ஸரமாந்ய புருஷனல்லன், ஒப்புயர்வற்ற புருஷோர்த்தமன் காண்மின் என்கிறாரிப்பாட்டில். உலகத்திலுள்ள ஸகலபதார்த்தங்களும் அவனுக்கு சரீரபூகங்களாய் எல்லாவற்றுக்கும் அவன் சரீரியாய் இருப்பவனாகையாலே அவனோடு ஒப்புச் சொல்லலாவதொரு பொருள் இல்லை, அவனுக்கு அவன்றானே உவமை என்கிறார் இது, அநந்வயாலங்காரம்.

English Translation

He is all things that exist. The penance-performing Rishis, the stars, the bright fire, the mountains, the eight Quarters, the twin orbs, -all these are he. He alone is his lord and equal

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்