விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    காண்காண் என*  விரும்பும் கண்கள்,*  கதிர்இலகு
    பூண்தார் அகலத்தான் பொன்மேனி,* - பாண்கண்
    தொழில்பாடி*  வண்டுஅறையும் தொங்கலான்,*  செம்பொன்
    கழல்பாடி*  யாம்தொழுதும் கை.        

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வண்டு - வண்டுகளானவை
பாடி - இசைப்பாடிக்கொண்டு
அறையும் - ஒலிசெய்யப்பெற்ற
தொங்கலான் - மாலையை யுடையனான அப்பெருமானுடைய
தொழில் - சேஷ்டிதங்களை
பாண் கண் பாடி - ராகத்திலே அமைத்துப்பாடி

விளக்க உரை

உலகத்தாருடைய இந்திரியங்களிற்காட்டில் என்னுடைய இந்திரியங்கள் மிகச்சிறந்தவை யென்கிறார். உலகத்தாருடைய இந்திரியங்கள் விஷயாந்தரங்களை அநுபவிப்பதிற்செல்லுகின்றன. அங்ஙனன்றியே என்னுடைய இந்திரியங்கள் பகவத் விஷயாநுபவத்திலேயே ஊன்றியிருக்கின்றன வென்கிறார். கண்களோ திருவாபரணங்களாலும் திருமாலைகளாலும் அழகுபெற்றுள்ள எம்பெருமானது பொன்மேனியைக் காண்பதற்கே பாரித்திருக்கின்றன. வாயோ அவனுடைய திவ்பசரித்திரங்களைப் பாடுவதிலேயே ஊற்றமுற்றிருக்கின்றது, கைகளோ அவனுடைய திருவடிகளைத் தொழவே காதல் கொண்டிருக்கின்றன என்றாராயிற்று.

English Translation

The lord wears radiant necklaces on his wide chest, "Oh, see, see!", crave my eyes, Bees that hum on his Tulasi-garland sing his praise in beautiful panns. My heart too desires to sing like, them while my hands desire to worship his geet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்