விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தாய்மார் மோர் விற்கப் போவர்*  தமப்பன்மார் கற்றா நிரைப் பின்பு போவர்* 
    நீ ஆய்ப்பாடி இளங் கன்னிமார்களை*  நேர்படவே கொண்டு போதி*
    காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து*  கண்டார் கழறத் திரியும்* 
    ஆயா! உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தாய்மார் - தாய்மாரானவர்;
மோர் விற்க - மோர் விற்பதற்கு;
போவர் - (வெளியூருக்குப்) போவர்கள்;
தமப்பன்மார் - (அப்பெண்களின்) தகப்பன்மாரானவர்;
கன்று ஆ நிரை பின்பு போவர் - இளம் பசுக்கூட்டங்களை மேய்க்கைக்காக அவற்றின் பின்னே போய்விடுவர்கள்;

விளக்க உரை

இடைச்சேரியிலுள்ள இளம்பெண்களைப் புணருகைக்கு நீ தருணம் பார்த்திருக்கிற வளவிலே அப்பெண்களின் தாய் தந்தையர் தங்கள் வீட்டிற்குக் காவலாக அப்பெண்களை நிறுத்திவிட்டுத் தாம் மோர் விற்கவும் மாடு மேய்க்கவும் வெளியிற்சென்றவாறே நீ அப்பெண்களை உனக்கு வேண்டின விடங்களிலே கொண்டு போகின்றாய்; ஏற்கனவே உன்னைப் பழிக்கின்ற கம்ஸாதிகள் நீ செய்த இத்தீம்புகளைக் கேட்டு -வெறுமனே மெல்லுகின்ற வாயனுக்கு ஒரு பிடி அவலும் அகப்பட்டாற் போலக் ‘கண்ணனை ஏசுவதற்குப் பற்பல சங்கதிகள் கிடைத்தன’ என்று மகிழும்படியாக இவ்வகைத் தீமைகள் செய்கின்ற உன்னை அநுகூலரும் வெறுக்கும்படியாய் இப்படிகளாலே நீ பிராகிருதனாகத் தோற்றுவையாகிலும் உனது மெய்யான ஸ்வரூபத்தை நான் அறிந்துகொண்டு உனக்கு அம்மம்தர அஞ்சுவேன் என்கிறாள். பெண்கள் தங்களகங்களிலே தனியிருத்ததலால் இவன் அவ்விடத்தேயிருந்து அவர்களோடு சமிக்கக் கூடுமாயினும், தாய்தந்தையரைத் தேடிக்கொண்டு ஆரேனும் அங்கு வந்தாற் செய்வதென்? என்ற சங்கையினால் வெளியிடத்தே அவர்களைக் கொண்டு போயினனென்க. கண்டார்-உன்னைப் பார்த்த பார்த்த மநுஷ்யர்களெல்லாரும் என்றும் பொருளாம்.

English Translation

Mothers in the village go to sell buttermilk, fathers go after grazing cows. You take the young girls to wherever you want, and do things that please you enemies, giving room for gossip. O Roaming Cowherd-lad, I know you now, I fear to give you suck.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்