விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆரே துயர் உழந்தார்*  துன்புஉற்றார் ஆண்டையார்,* 
    காரே மலிந்த கருங்கடலை,*  நேரே
    கடைந்தானை*  காரணனை, நீர்அணைமேல்*  பள்ளி
    அடைந்தானை நாளும் அடைந்து?     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கார் மலிந்த கரு கடலே - மேகங்கள் நிறைந்த பெரிய கடலை
நேரே கடைந்தானை - தானே முன்னின்று கடைந்தவனும்
நாரணனை - ஸகல ஜகத்காரண பூதனும்
துன்பு உற்றார் ஆர் - துக்கங்களை அநுபவித்தவர்கள் யார்? (ஒருவருமில்லை) (அப்படிப்பட்டவர்கள்)
ஆண்டையார் - எங்கிருக்கிறார்கள்? (எங்குமில்லை)

விளக்க உரை

எம்பெருமானை ஆச்ரயிக்கப்பெற்றவர்களில் ஆரேனும் துன்பப்படுவாருண்டோ? ஒருவருமில்லை என்கிறார். துயருழந்தார் துன்பற்றார் ஆரே? – துயர் என்று துக்கத்துக்குப் பேராயினும் இங்கு இலக்கணையால் துக்கஹேதுவான பாபத்தைச் சொல்லுகிறது. எத்தனை கொடிய பாவங்கள் செய்தவர்களாயிருந்தாலும் அப்பாவங்களின் பலனான துன்பங்களை பகவத் பக்தர்கள் அனுபவிக்க மாட்டார்களென்கை. “மாயனை வாயினால்பாடி மனத்தினால் சிந்திக்க, போயபிழைப்பும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்“ என்றது காண்க. ஆண்டையார் – எவ்விடத்திலுள்ளார்? எவ்விடத்திலுமில்லை யென்றபடி. காரேமலிந்த கருங்கடலை நேரே கடைந்தானை –சிலர் மேலெழுந்தவாரியாக வந்து அடிபணிந்தாலும் அவர்களுக்காகத் தன்னுடம்பு நோவக் காரியம் செய்யுமவனன்றோ எம்பெருமான், அப்படிப்பட்டவனே யடைந்து துக்கப்படுவாருண்டோ? நீரணைமேல் பள்ளியடைந்தானை – ஆர்த்தியோடே வந்து சேர்த்து நம்மைக் கூவுவாருண்டோவென்று கடலில் துயிலும் பெருமானையடைந்து துக்கப்படுவாருண்டோ?

English Translation

If the joy-bereft world would only offer worship everyday to the Lord who churned the ocean, who is the cause of all and who reclines in the ocean, then who can ever suffer misery? Who in this wide world can?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்