விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தொழுதால் பழுதுஉண்டே*  தூநீர் உலகம்,*
    முழுதுஉண்டு மொய்குழலாள் ஆய்ச்சி,* - விழுதுஉண்ட-
    வாயானை*  மால்விடைஏழ் செற்றானை,*  வானவர்க்கும்
    சேயானை*  நெஞ்சே! சிறந்து?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முழுது - முழுவதும்
உண்டு - திருவயிற்றிலே வைத்தவனாயும்
மொய் குழலாள் ஆய்ச்சி - அழகிய கூந்தலையுடையளான யசோதையினுடைய
விழுது - வெண்ணெயை
உண்ட வாயானை - அமுதுசெய்த வாயையுடையவனாயும்

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “சூழ்கழலே நாளுந்தொடர் ஆழி நெஞ்சே! தொழுது“ என்றார், அதற்கு நெஞ்சு இசையாதிருப்பதுபோல் தோன்றிற்று, நெஞ்சே! நான் உனக்குச் சொன்னதில் ஏதேனும் தப்பு உண்டோ? எம்பெருமானைத் தொழும்படிதானே நான் உனக்குச் சொன்னேன், தொழுதால் தீமையுண்டாகுமோ? சொல்லாய் என்கிறார். கடல்சூழ்ந்த வுலகங்களையெல்லாம் பிரளயகாலத்தில் அமுது செய்ததற்கு மாற்றுமருந்தாகத் திருவாய்ப்பாடியில் வெண்ணெயமுது செய்தவனும், அவ்வெண்ணெய்போல் மழமழவென்ற திருமேனியைக் கொண்டு முரட்டு எருதுகளோடே பொருது வெற்றிபெற்றவனும் தேவர்கட்கும் எட்டாதவனுமான எம்பெருமானைத் தொழுதால் குற்றமுண்டோ? (தொழுதால் அது வீணாகுமோ என்றுமாம்)

English Translation

Worship can cause no harm, O Heart! The child who swallowed the Universe is the one who ate the coiffured dame's butter, killed seven bulls, and became rare even to the gods.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்