விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வடிவுஆர் முடிகோட்டி*  வானவர்கள்,*  நாளும்
  கடிஆர் மலர்தூவி*  காணும் - படியானை,*
  செம்மையால் உள்உருகி*  செவ்வனே நெஞ்சமே,* 
  மெய்ம்மையே காண விரும்பு.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வானவர்கள் - நித்யஸூரிகள்
வடிவு ஆர் - அழகு பொருந்திய
முடி - கிரீடங்களை
கோட்டி - தாழ்த்தி
கடி ஆர் மலர் - மணம் பொருந்திய புஷ்பங்களை

விளக்க உரை

நித்யஸூரிகள் தங்களுடைய அழகிய முடிகளை வணங்கி நறுமலர்களைப் பணிமாறி ஸேவிக்கும்படியாகவுள்ள பெருமானை நெஞ்சமே! காணவிரும்பு என்கிறார். அவனைக் காண விரும்பினால் கண்டுவிடமுடியுமோ? என்னில், அதற்காக விசேஷித்து அருளிச் செய்கிறார் ‘செம்மையால் செவ்வனே மெய்ம்மெயே காணவிரும்பு‘ என்கிறார். அதாவது – நம்முடைய முயற்சியால் நாமே காண விரும்பினால் அவ்விருப்பம் பழுதாய்விடும், அங்ஙனன்றியே ‘பிரானே! உன் வடிவை நீயே காட்டித் தந்தருளவேணும்‘ என்று அத்தலையாலே வருங்காட்சியை வேண்டினால் பழுதுபடாமே காணப்பெறலாமிறே. இப்படி அவனை காட்டக்காண்கையே செம்மையால் செவ்வனே காண்கையாம்.

English Translation

So I say, O Heart! The celestials bow their crowned heads at his feet and offer fresh flowers as, the means to see him. You too do the same, melting yourself with the desire to see him as he really is.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்