விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சீதக் கடலுள்*  அமுது அன்ன தேவகி* 
    கோதைக் குழலாள்*  அசோதைக்குப் போத்தந்த*
    பேதைக் குழவி*  பிடித்துச் சுவைத்து உண்ணும்*
    பாதக் கமலங்கள் காணீரே* 
      பவள வாயீர் வந்து காணீரே  (2) 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சீதம் - குளிர்ந்திராநின்றுள்ள;
கடல் - திருப்பாற்கடலிலே;
உன் அமுது அன்ன - உள்ளமுதாகப்பிறந்த பிராட்டியோடொத்த;
தேவகி - தேவகிப்பிராட்டியால்;
கோதை குழலான் அசோதைக்கு போத்தந்த - பூமாலையால் அலங்கரிக்கப்பட்ட கேசபாசத்தையுடைய யசோதைப் பிராட்டிக்குப் போகவிடப்பட்டவனாய்;

விளக்க உரை

உரை:1

(எம்பெருமானுடைய சிறந்த திருவடியில் தேன் வெள்ளமுன்டு) என்று சொல்லப்பட்டுள்ளது. இதை யடியொற்றி ஆழ்வார்களும் ‘‘தேனே மலரும் திருப்பாதம்’’ என்கிறார்கள். இப்படிப்பட்ட தனது திருவடியிலுள்ள தேனைப் பருகுவதற்காகவும், தனது திருவயிற்றில் கிடக்கும் உலகங்கட்கெல்லாம் உஜ்ஜீவநமுண்டாகும்படியாகவும் ஸ்ரீக்ருஷ்ணன் தனது திருவடிகளில் ஒன்றையெடுத்து வாயிலே வைத்துச் சுவை பார்த்துக் கொண்டிருக்க, அதைக் கண்ட யசோதைப் பிராட்டி தான் மிக மகிழ்ந்து, இதைப் பிறகும் கண்டு மகிழவேணும் என்றெண்ணித் தன்னருகிலுள்ளாரைக் கொண்டாடியழைத்து, ‘நீங்கள் இக்குழந்தை சுவைத்துண்ணும் இப்பாதக் கமலங்களைப் பாருங்கள்’ என்று அவர்கட்குக் காட்டுகின்றாள். கடலில் இரண்டு அமுதம் பிறந்தன; ஒன்று தேவர்களுக்கு போக்யமான உப்புச்சாறாகிய அம்ருதம்; அது புறவமுதமாம். மற்றொரு அம்ருதம். ‘‘அமுதில் வரும் பெண்ணமுது’’ எனப்பட்ட பிராட்டி: இவளே உள்ளமுதம். ஆகவே இங்கு ‘‘உள்ளமுதன்ன’’ என்றது பிராட்டியைப் போன்ற என்றபடியாயிற்று. ‘‘திருவின் வடிவொக்குந் தேவகி’’ என்று மேலுங் கூறுவர். பிராட்டியைப் போலே பரோபகாரமே சீலமாகவுள்ள தேவகி என்க. யசோதை தானே சொல்லுகிற பாசுரமாக அமைந்தவிதனில் ‘‘கோதைக்குழலா ளசோதைக்குப் போத் தந்த’’ என்னலாமோ வென்னில்; யசோதையின் சொல்லாக அருளிச்செய்தாலும் இடையில் தமது தன்மையுந்தோன்ற அருளிச்செய்வாரென்க.

உரை:2

திருப்பாற்கடலில் தோன்றிய தேவர்களுக்கு உணவான சாவாமருந்து என்று சொல்லப்படும் அமிழ்தத்தை ஒத்த தேவகி அன்னை ~ தேவகிப் பிராட்டியானவர், திருப்பாற்கடலில் தோன்றிய அமிழ்தத்தினைப் போன்றவர்.நறுமணமிகுந்த, செறிவாகத் தொடுக்கப்பட்ட மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கூந்தலையுடையவளான யசோதை அன்னைக்குப் போத்தந்த ~ அதாவது, தேவகி அன்னை தன் திருவயிற்றில் உதித்த கண்ணபிரானை, கம்சனிடமிருந்து குழந்தையைக் காப்பதற்காக யசோதை அன்னையிடம் அனுப்பிவைத்தார்.பேதையான இந்தக்குழந்தை, தானேப் பிடித்துச் சுவைத்து உண்ணுகின்ற குழந்தைக்கண்ணன் தன் காலின் விரல்களை எடுத்து வாயில் வைத்து விரும்பிச் சுவைக்கின்ற அந்த அழகிய பாதமலர்களை, வந்து பாருங்கள்! தாமரை இதழ் போன்று மென்மையாகவும் இளஞ்சிவப்பு நிறத்திலும் இருக்கின்ற அழகினைப் பாருங்கள், பவளம் போன்று சிவந்த வாயினையுடையவர்களே வந்து பாருங்கள்.

English Translation

O, Coral-lipped ladies, come here and see. Here is the darling child which nectar-sweet Devaki gave to the coiffure dame Yasoda. See the innocent child grab his foot and such his toe!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்