விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வந்துஉதைத்த வெண்திரைகள்*  செம்பவள வெண்முத்தம்*
    அந்தி விளக்கும் அணிவிளக்காம்,* - எந்தை
    ஒருஅல்லித் தாமரையாள்*  ஒன்றியசீர் மார்வன்,* 
    திருவல்லிக்கேணியான் சென்று  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

 
ஒரு அல்லி தாமரையாள் - அழகிய இதழ்களையுடைய தாமரைப்பூவை இருப்பிடமாகவுடைய பிராட்டி
சென்று ஒன்றிய சீர் மார்பன் - வந்து பொருந்திய அழகிய திருமார்பை யுடையவனும்
அந்த விளக்கும் அணி விளக்குஆம் - ஸ்ந்தியாகாலத்தை விளக்குகின்ற மங்களதீபங்களாக ஆகப்பெற்ற
திருவல்லிக்கேணியான் - திருவல்லிக்கேணியில் எழுந்தருளியிருப்பவனுமான பெருமான்
எந்தை - எனக்கு ஸ்வாமி

விளக்க உரை

திருப்பாற்கடலில் நின்றும் தம் திருவுள்ளத்துக்கு வரும்போது திருவல்லிக்கேணியில் தங்கி வந்தானென்கிறார் போலும். முதலிரண்டடிகள் திருவல்லிக்கேணிக்கு விசேஷணம், அருகிலுள்ள கடலில் அலைகள் மோதும்போது சிவந்த பவழங்களும் வெளுத்த முத்துக்களும் கொழிக்கப்படுகின்றன, அவை ஸாயம்ஸந்தியா காலத்தில் ஏற்றப்படுகின்ற மங்கள தீபமோ என்னலாம்படி யிருக்கின்றனவாம். சில விளக்குகள் செந்நிறமான ஒளியை யுடையனவாயும். சில விளக்குகள் வெண்ணிறமான வொளியை யுடையனவாயும் இருப்பதுண்டாகையாலே செந்நிறப் பவழங்களும் வெண்ணிற முத்துக்களும் திருவிளக்காகச் சொல்லப்பட்டன. திருவல்லிக்கேணியில் எப்போது பார்த்தாலும் திருவிளக்கேற்றப்பெற்ற மாலப்பொழுதாகவே காணப்படுமென்று கருத்து. இப்படிப்பட்ட திருவல்லிக்கேணியில் எழுந்தருளியிருக்கின்ற திருமாமகள் கொழுநன் எனக்கு ஸ்வாமி – என்றாராயிற்று. ‘ப்ரவாளம்‘ என்னும் வடசொல் பவள மெனவும், ‘முக்தா‘ என்னும் வடசொல் முத்து எனவும் ‘ஸந்த்யா‘ என்னும் வடசொல் அந்தி யெனவும் திரிந்தன.

English Translation

By the tossing sea of Tiruvallikeni, -Where corals and pearls washed ashore liken the evening sky and the lamps they light of dusk, -they Lord has come to reside, along with the lotus lady who graces his auspicious chest. He is my master.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்