- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
எம்பெருமானை விசேஷணங்களுடனே கண்டேனென்றார் கீழ்ப்பாட்டில், அவனைக் கண்டபோதே விரோதிவர்க்கமெல்லாம் வேரற ஒழிந்தன வென்கிறார் இப்பாட்டில். பிராட்டிதானே ஆசைப்பட்டுவந்து ஏறும்படியான விலக்ஷணமான திருமார்புபடைத்த திருமாலே! எனது மனமானு உன்னிடத்திலே பொருந்தி ஸேவிக்கப் பெற்றதனால், இதுவரையில் பாழே கழிந்த பல பிறவிகளுக்குள்ளே இன்றே உனது திருவடிகளை ஸேவிக்கப்பெற்றவனானேன், உன்னுடைய அநுபவத்திற்கு விரோதியாயிருந்த ஐந்ம பரம்பரைகளையும் இன்றோடு அறுத்துவிட்டேன், (அதாவது –இனிமேல் நமக்கு நித்யாநந்தமே யொழியப் பிறவியில்லையென்று நிச்சயித்துவிட்டேன் என்கை.) கீழ்ப்பாட்டில் ‘பொன்மேனிகண்டேன்‘ என்று திருமேனியிலே வாய்வைத்தார், சிறுகுழந்தைகள் தாயின்முலையிலே வாய்வைப்பதுபோல சேஷபூதர் இழியுந்துறை திருவடியே யாகையாலே முந்துறமுன்னம் திருமேனியில் வாய்வைத்தோமோ யென்று அநுதபித்தவர்போல இதில் “இன்றே கழல் கண்டேன்“ என்கிறார் என்னலாம். பொன்தோய்வரைமார்பில் – ‘பொன்‘ என்று பிராட்டியைச் சொல்லிற்றாப், ‘பிராட்டி வந்து சேர்ந்த வரைமார்பிலே‘ என்று பொரு கொள்ளலாமாயிலும், இந்த வாக்கியத்திலேயே திருக்கண்டுகொண்ட“ எனவருதலால், ‘பொன் தோய்‘ என்பதற்குப் பொன்மயமான ஆபரணங்கள் தோயப்பெற்ற எனப் பொருள்கொள்வதே பொருந்தும். பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் “பொன்தோய் இத்யாதி“ என்று ப்ரதீகமெடுத்து – “பிராட்டிதானே ஆசைப்பட்டு வந்து ஏறும்படியான மார்புடைத்த ச்ரிய பதியே!“ என்று பொருளருளிச் செய்திருப்பது ‘பொன்தோய்‘ என்றதன் பொருளன்று, பொன்தோய்வரை மார்பில் பூத்துழாய் திருக்கண்டு கொண்ட திருமாலே“ என்றவளவுக்கு அருளிச்செய்த தாத்பர்யமாம் அது. திருத்துழாயணிந்த திருமார்வையுடையனாய்த் திருப்பாற்கடல் கடைந்தபோது பிராட்டியானவன் அத்திருமார்பிலே வந்து சேர்ந்து அத்திருத்துழாயை அநுபவிக்கப்பெற்றாளென்ற விதனால், பிராட்டிதானே ஆசைப்பட்டுவந்து மேல் விழும்படியான போக்ய்யை யுடையவன் என்பது பெறப்படும். கடல் கடைந்தகாலத்துத் திருமார்பிலே திருவாபரணங்களணிந்து கொண்டிருந்தமைபற்றிப் பொன்தோய் என்று திருமார்புக்கு அடைமொழி கொடுக்கப்பட்டது. மார்பிலிருந்த பூத்துழாயைத் திருவானவள் கண்டு கொண்டாளென்றால் அவள் மார்பிலே வந்து சேர்ந்தாளென்றதொமென்கை.
English Translation
Your gold-ornamented mountain-like chest, -O Adorable Lord of Sri!, -earned for you her tualsi garland in the yore, With my heart brimming with love for you, I too sought your lotus feet. Now my seven births are destroyed.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்