விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாலே நெடியோனே!*  கண்ணனே,*  விண்ணவர்க்கு-
    மேலா!*  வியன் துழாய்க் கண்ணியனே,*  - மேலால்-
    விளவின் காய்*  கன்றினால் வீழ்த்தவனே,*  என் தன்-
    அளவு அன்றால்*  யானுடைய அன்பு. (2)           

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாலே – (அடியாரிடத்தில்) வியாமோஹ முள்ளவனே!
நெடியோனே – ஸர்வஸ்மாத்பரனே!
கண்ணனே – ஸ்ரீக்ருஷ்ணனே!
விண்ணவர்க்கு மேலா – நித்யஸூரிகளுக்குத் தலைவனே!
வியன் துழாய் கண்ணியனே – அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ளவனே!

விளக்க உரை

அமுதம்போன்ற பல விளிகளாலே எம்பெருமானை யழைத்து “என்றனளவென்றால் யானுடையவன்பு“ என்று சொல்லித் தலைக்கட்டுகிற இவ்வாழ்வாருடைய கருத்து யாதெனில், பிரானே! பிரயோஜநாந்தரங்களை விரும்புகின்ற தேவர்களுக்கு நீ படாதன்பட்டு உடம்புநோவக் காரியங்கள் செய்தான், எனக்காக அப்படி ஒருகாரியமும் செய்யவேண்டா, என்னால் தாங்கமுடியாதபடி வளர்ந்து செல்லுகிற எனது காதலை அடக்கித் தந்தாயாகில் இதுவே எனக்குப் பாமோபகாரம் செய்ததாகும் என்கை. இதனால், பகவத்விஷயத்தல் தமக்கு அளவுகடந்த அன்பு விளைந்திருக்கும்படியைச் சொல்லி, இப்பிரபந்தம் கற்பார்க்கும் இப்படிப்பட்ட அன்பு விளையும் என்று ஸூசிப்பிக்கிறபடி. இப்பாசுரந்தன்னையே திருமங்கையாழ்வார் திருக்குறுந்தாண்டகத்தில் “சித்தமும் செவ்வைநில்லாது என்செய்கேன் தீவினை யேன், பத்திமைக்கு அன்புடையேனாவதே பணியாய் எந்தாய்!“ என்று விரித்துரைத்தனர் போலும். இஷ்டங்களைக் கொடுப்பதற்கும் அநிஷ்டங்களைத் தவிர்ப்பதற்கும் கடவனான எம்பெருமானே அன்புக்கு உரியவன் என்று சொல்லிப் பிரபந்தத்தைத் தலைக்கட்டினாராயிற்று.

English Translation

O My Love! O Ancient Lord! My krishnal Lord labove the celestials Lord wearing a fresh Tulasi garland Lord who felled the wood-apples with a calf! Alas, I cannot contain my love !

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்