விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  இறை எம் பெருமான் அருள் என்று*  இமையோர்-
  முறை நின்று*  மொய்ம் மலர்கள் தூவ,*  - அறை கழல-
  சேவடியான்*  செங்கண் நெடியான்,*  குறள் உருவாய்-
  மாவடிவின்*  மண் கொண்டான் மால். (2) 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

இமையோர் – (பிரமன் முதலான) தேவர்கள்
எம்பெருமான் – ‘எம்பெருமானே!‘ (எங்கள் விஷயத்தில்)
இறை – கொஞ்சம்
அருள் என்று – கிருபைபண்ண வேணும் என்று சொல்லி
முறை நின்று – அடிமைக்கு ஏற்ப நின்று

விளக்க உரை

எம்பெருமான் செய்தருளின அவதாரங்கள் பலபல கிடந்தாலும் த்ரிவிக்ரமாவதாரத்திலும் க்ருஷ்ணாவதாரத்திலுமே இவ்வாழ்வார் திருவுள்ளம் மிக ஈடுபட்டிருக்குமென்பது சாத்துப் பாசுரமாகிய இப்பாட்டிலும் மேற்பாட்டிலும் விளங்கும். உலகங்களை வியாபிக்கும்போது ஓங்கிவளர்ந்த திருவடியைக் கண்டு அதற்குமுன் அஹங்காரிகளாயிருந்த தேவர்களெல்லாரும் ‘ஸ்வாமிந்! எமக்கு சிறிது அருள் புரியவேணும்‘ என்று இரந்து புஷ்பங்களை ஸமர்ப்பித்து வழிபாடுகள் செய்தமை முன்னடிகளின் கருத்து. இப்படி தேவர்களெல்லாரும் ஆச்ரயிக்கும்படியாக எம்பெருமான் உலகளந்தான் என்று சொல்லிவிட்டதானது – அத்திருவடிகளே நமக்கும் ஆச்ரயணீயம் என்றபடி.

English Translation

Forever the gods wait patiently to OFFER worship with flowers and seek your grace. With your tinkling lotus feet, you came with beautiful lotus-eyes as a manikin and took the Earth from Mabali. O My Love!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்