விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அத்தியூரான்*  புள்ளை ஊர்வான்,*  அணி மணியின்-
  துத்தி சேர்*  நாகத்தின்மேல் துயில்வான்,*  - முத்தீ-
  மறை ஆவான்*  மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும்*
  இறை ஆவான் எங்கள் பிரான். (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

புள்ளை ஊர்வான் – பெரிய திருவடியை வாஹனமாகக் கொண்டு நடந்து மவனும்
அணி மணியின் துத்திசேர் நாகத்தின் மேல் துயில்வான் – அழகிய மாணிக்கங்களோடு கூடினவனாய் படப்பொறிகளை யுடையனான ஆதிசேஷன் மேல் பள்ளி கொள்பவனும்
முத்தீ ஆவான் – மூன்று அக்நிகளாலே ஆராதிக்கப்படுகிறவனும்
மறை ஆவான் – வேதங்களால் பிரதிபாதிக்கப்படுகிறவனும்

விளக்க உரை

தென்னத்தியூரரான போருளாளப் பெருமான் மங்களாசாஸநம் செய்தருளு மிப்பாசுரத்தில் ‘புள்ளையூர்வான்‘ என்று ஆழ்வார் திருவாய்மலர்ந்தருளவேதான் இப்பெருமானுடைய கருடோத்ஸவம் இமவந்தந் தொடங்கி இருங்கடலளவும் பிரஸித்தமாகப் பெருமேன்மை வாய்ந்ததாயிற்றென்று பெரியோர் பணிப்பர். நாகத்தின்மேல் துயில்வான் –திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான் மீது பள்ளிகொள்ளும் பெருமானே ஸ்ரீஹஸ்திகிரியிலும் ஸேவைவஸாதித்தருள்வதாக அநுஸந்திக்கிறார். இந்த விசேஷணம் கூரத்தாழ்வான் திருவுள்ளத்திலே புகுந்திருந்து, வரதராஜஸ்தவத்தில் “நீலமேக நிபம்“ என்னும் ச்லோகத்தில் ‘அநந்தசயம் த்வாம்‘ என்றருளிச் செய்வதற்குக் காரணமாயிற்றென்க. “***“ என்ற வேதாந்த தேசிக திவ்யஸூக்தியும் ஸ்மரிக்கத்தகுமிங்கு. துத்தி –படங்களிலுள்ள பொறி, இலக்கணையால் படத்தையும் சொல்லுமென்ப. “முத்தீ மறையாவான்“ “முத்தி மறையாவனா“ என்பன பாடபேதங்கள். முந்தின பாடத்தில், முத்தீ ஹோமம் செய்யும் முகத்தாலே ஆராதிக்கப்படுகவனும் வேதங்களால் பிரதிபாதிக்கப்படுபவனுமான பெருமான் என்க. அன்றியே, த்ரேதாக்நிகளைச் சொல்லுகிற வேதங்களாலே பிரதிபாதிக்கப்படுமவன் என்றுமாம். இனி, “முத்திமறையாவான்“ என்ற பாடத்தில், மோக்ஷத்தைப் பிரதிபாதிக்கின்ற வேதங்களாலே சொல்லப்படுமவன் என்கை.

English Translation

The Lord of Attiyur rides a bird. He reclines on a beautiful snake with radiant gem-set hoods. He is the philosophy of Mukti. He is the Lord of even the poison-throated siva. He is our Lord.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்