விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பின்னால் அரு நரகம்*  சேராமல் பேதுறுவீர்,* 
  முன்னால் வணங்க முயல்மினோ,*  - பல் நூல்-
  அளந்தானை*  கார்க் கடல் சூழ் ஞாலத்தை,*  எல்லாம்-
  அளந்தான் அவன் சேவடி   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பின்னால் – சரீரம் விழுந்தபின்பு
அரு நகரம் – கடினமான நரகத்தை
சேராமல் – அடையாமலிருக்கும் படிக்கு
பேதுறுவீர் – மனங்கலங்கியிருக்கும் மனிசர்களே!
பல் நூல் – பலவகைப்பட்ட சாஸ்த்ரங்களினால்

விளக்க உரை

இப்பாட்டுத்தொடங்கி மேல் நான்கு பாட்டுக்களாலே பரோபதேசம் பண்ணுகிறார். உலகத்தவர்களே! நீங்கள் செய்யும் காரியங்களைப்பார்த்தால் நரகமார்க்கத்திற்கே செல்லப்பார்க்கிறீர்களென்று நினைக்கும்படியா யிராநின்றது. ‘நரகவேதனை நமக்குக் கிடைத்தால் என்செய்வோம்‘ என்று கலங்கி நிற்கிறீர்களாகில் அதைத் தப்புவதற்கு இப்போதே உபாயம் சொல்லுகிறேன் கேளுங்கள், உலகளந்த பெருமானுடைய சேவடியை வணங்குதற்கு முயற்சி செய்தீர்களாகில் பின்னால் அருநரகம் சேராமல் பிழைக்கலாம் என்கிறார். ‘சேவடியை வணய்குமினோ‘ என்னாமல் – ‘வணங்கமுயல்மினோ‘ என்றமையால் – எம்பெருமான் திருவடிகளை வணங்கவேணுமென்னும் முயற்சியுண்டான மாத்திரமே நரகம் தவிரும் என்பது விளங்கும்.

English Translation

O, Foolish people lest you attain hell after life, learn to worship His feet while you live. He measured all the Earth and ocean. All the texts declare him as the supreme lord!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்