விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  குறையாக வெம் சொற்கள்*  கூறினேன் கூறி,* 
  மறை ஆங்கு என உரைத்த மாலை,*  - இறையேனும்- 
  ஈயும்கொல் என்றே*  இருந்தேன் எனைப் பகலும்,* 
  மாயன்கண் சென்ற வரம்.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மறை –  வேதங்களும்
ஆங்கு என உரைத்த மாலை – ப்ரத்யக்ஷித்துச்சொல்ல மாட்டாமல் பரோக்ஷமாகவே சொன்ன எம்பெருமான (அல்பஜ்ஞனான நான்)
மாயன் கண் சென்ற வாரம – அப்பெருமானிடத்தில் தங்கியிருக்கின்ற அநுக்ரஹமானது.
இறையேனும் – ஸ்வஸ்பமான பலனையாகிலும்
குறை ஆக – குறையுண்டாம்படி

விளக்க உரை

கீழ் எழுபத்துநான்காம் பாசுரத்தில் “யானே இத்தமிழ் நன்மால யிணையடிக்கே சொன்னேன், பெருந்தமிழன் நல்லேன் என்று பகவத்விஷயத்தில் நாம் கவிபாடப் பெற்றமைக்கு மகிழ்ந்து பேசினவர் கீழ்ப்பாட்டிற்படியே நாய்ச்சிமாரும் பெருமாளாகக் கூடியிருக்கும் சேர்த்தியழைகைக் கண்டவாறே அந்தோ! இச்சேர்த்தி யழகுக்குப் பொருத்தமாகச் கவிபாடத் தெரியவில்லை எனக்கு செவிக்கினிய “செஞ்சொற்களால் நிறையப் பாடுகையின்றியே கடுஞ்சொற்களால் ஏதே அரைகுறையாகப் பாடினேனே!, இப்படி பாடினது மல்லாமல் நம்முடைய பாடலுக்கு ஏதோ வெகுமதி கிடைக்கப்பொகிறதென்று கைம்மாறு தன்னையுங் கருதிக்கிடந்தேனே! என்று அநுதபிக்கிறார். மறை ஆங்கெனவுரைத்தமாலை – ப்ரக்யக்ஷ நிர்த்தேசமென்றும் பரோக்ஷ நிர்தேசமென்றும் இருவகையான வ்யவுஹாரங்களுண்டு. ‘அவன் அங்கேயிருக்கின்றான் அது அப்படிப்பட்டது என்றாற்போன்ற வ்யவ்ஹாரங்களை பரோக்ஷ திர்த்தேசமெனப்படும் இவன் இதோஇருக்கின்றான் இது இப்படிப்பட்ட என்றாற் போன்ற வ்யாவஹாரங்கள் ப்ரத்யக்ஷ நிர்த்தேசமெனப்படும். 1. “யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ“ என்று – எம்பெருமானுடைய தனமை சிறிதுங் கண்டறியமாட்டாமல் வேதங்களும் மீள்கின்றன என்கையாலே வேதபுருஷனும் ப்ரத்யக்ஷிக்க பேசுகின்றானென்பதை மறை ஆங்கெனவுரைத்த‘ என்றதனாற் காட்டினபடி.

English Translation

Limited praise with fowl words have I offered to the adorable lord, extolled insufficiently by the vedas. Yet I wait patiently, for the fulfilment of my prayers, for is not the lord full of wonders?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்