- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
ஸ்ரீராமாவதாரத்தில், இராமபிரான் தந்தையின் நியமநங்கொண்டு காட்டுக்குப் புறப்படுகையில் தாயாகிய கௌஸல்யையும் தேவியான பிராட்டியும் வேண்டச்செய்தேயும் அவ்வேண்டுகொளைச் சிறிதுங் காதிற்கொள்ளாமல் ‘தந்தை சொல் தவறலாகாது‘ என்பதுபற்றியும், ‘துஷ்டர்களைத் தண்டித்து சிஷ்டர்களை வாழ்விப்பதற்குப் பாங்காக நமக்கு வாய்த்த வநவாஸத்தை இழக்கலாகாது‘ என்பதுபற்றியும் ஒன்றையும் சிந்தியாது காட்டுக் கெழுந்தருளின பெருங்குணத்திற்கு ஒப்பாகச் சொல்லக்கூடிய விஷயம் வேறொன்றுமில்லை, சொல்லில், அப்பெருமான் வஸிஷ்டசண்டாள விபாகம் பாராமல் எல்லார்தலையிலும் திருவடியை வைக்கத்தாவி யன்றுலகளந்த சரிதமொன்றே ஒப்பாகச் சொல்லத்தகும், இராமனுடைய பெருங்குணத்திற்குத் திரிவிக்ரமனுடைய பெருங்குணமே ஒப்பாகப் பொருந்தவற்று – என்கிறார். இதனால், ‘சந்திரன் சந்திரனைப்போலே அழகியான், கடல் கடல்போலே பெரிது என்னுமாபோலே எம்பெருமானுடைய குணத்திற்கு அவனுடைய குணத்தையே ஒப்புச் சொல்லவேணு மத்தனையல்லது, வேறொருவருடைய குணமும் பகவத்குணத்திற்கு ஈடாக மாட்டாது – என்று காட்டியவாறு. “அத்தனைக்கும் அவனளந்த நீணிலந்தான் நேர்“ என்றதற்கு – இராமபிரானுடைய குணம் எப்படிப்பட்ட தென்றால், “பெரிது பெரிது புவனம் பெரிது“ என்கிறாப்போலே இவ்வுலகம் எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரிது என்னலாமத்தனை யொழிய, மற்றைப் படியாக அவன் குணத்தை வகையிட்டுச் சொல்ல முடியாது என்றுங் கருத்தாகலாம். சொல்நின்ற – ஸ்ரீராமாயண ப்ரதிபாத்யமாய் நின்ற என்றுமாம். மூன்றாமடியில். “தோள் நலத்தான்“ என்பதே ப்ராசீந பாடம், “தோள் நலந்தான்“ என்றபாடத்திலும் பொருள் பொருந்தும், தோள – திருந்தோள்களுடையனான இராமபிரானுடைய நலந்தானத்தனைக்கும் – மஹாகுணத்துக் கெல்லாம் என்க.
English Translation
Contented, the Lord left the city, not heeding his mother. who stood behind pleading: but heeded the coiffured ska who stood before him and pleaded. The glories of our mighty Lord are as big as the Earth he measured and took.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்