விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மைஆர் கண் மட ஆய்ச்சியர் மக்களை*  மையன்மை செய்து அவர் பின்போய்* 
  கொய் ஆர் பூந்துகில் பற்றித் தனி நின்று*  குற்றம் பல பல செய்தாய்*
  பொய்யா உன்னைப் புறம் பல பேசுவ*  புத்தகத்துக்கு உள கேட்டேன்* 
  ஐயா உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மை ஆர் கண் - மையை அணிந்துள்ள கண்களையும்;
மடம் - மடப்பம் என்ற குணத்தையுமுடையரான;
ஆய்ச்சியர் மக்களை - இடைப் பெண்களை;
மையன்மை செய்து - மோஹிக்கப்பண்ணி;
கொய் ஆர் பூ துகில் - கொய்தல் நிறைந்த அழகிய புடவைகளை;

விளக்க உரை

நீ இடைப் பெண்களுடைய கொய்சகத்தைப் பிடித்துக் கொண்டு அவர்கள் பின்னே போய் அவர்களோடு ஏகாந்தமான இடத்திலே இருந்து சொல்லத்தகாத தீம்புகளைச் செய்தாய்; நீ செய்யும் தீம்புகளைப் பிறர் அறிந்து சொல்லும் அவற்றை எழுதத்தொடங்கினால் பெரியதொரு புஸ்தகமாக முடியும். அதனால், உலகத்தாரால் செய்யமுடியாதவற்றையும் செய்யவல்ல அதிமாநுஷத் தன்மையை யுடையவனென்று உன்னை அறிந்து கொண்டேன்; ஆதலால் உனக்கு அம்மந்தர அஞ்சுவேனென்பதாம். முதலடியில் “மக்களை” என்பதை உருபுமயக்கமாகக்கொண்டு ‘மக்கள் பக்கலிலே’ என ஏழாம் வேற்றுமைப் பொருளானது, மையன்மை செய்து - மோஹத்தைப் பண்ணி என்றுரைத்து கண்ணபிரான் தான் அம்மக்களிடத்தில். மயக்கமுற்று, அவர்கள் இவனை மறுத்த போதிலும் இவன் விடாமல் அவர்களுடைய புடவைகளைப் பற்றிக்கொண்டு ஏகாந்த ஸ்தலத்திற்சென்று பற்பல சிருங்கார சேஷ்டைகளைச் செய்தபடியைக் கூறுவதாகக் கருத்துரைத்தலும் ஒக்குமென்க. மடமக்கள்-மடமாவது-அறிந்தும் அறியாதுபோலிருத்தல் மாதர்க்கு நாண், மடம், அச்சம், பயிர்ப்பு என நற்குணங்கள் அமையவேண்டுமென்று அறிக. மையல் எனினும் மையன்மை எனினும் மயக்கமே பொருளாம்; மை-பண்புப்பெயர் விகுதி; விகுதிமேல் விகுதி கொய்யார் பூந்துகில்=கொய்சகம்; ‘கொசாம்’ என்பது உலக வழக்கு. ‘பேசுவ’ என்கிறவிது பலவின்பால் படர்க்கை வினைமுற்று; அது இங்கு பெயரெச்சப்பொருள் தந்து நிற்றல் காண்க. வினைமுற்று வினையெச்சமாகலும் குறிப்பு முற்றெச்சமாகலும் உளதே, என்ற சூத்திரத்தில் ‘ஆகலும்’ என்ற(எண்ணி நின்ற எதிரது தழுவிய எச்ச) உம்மையை நோக்குக.

English Translation

Infatuating cowherd girls with large Kajal-lined eyes, you go after them and steal their frilled Sarees, then do many many wrongs. O False One, the complaints I hear about you could fill a book. O Master! I know you now, I fear to give you suck.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்