விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தவம் செய்து*  நான் முகனே பெற்றான்,*  தரணி-
    நிவந்து அளப்ப நீட்டிய பொற் பாதம்,*  - சிவந்த தன்-
    கை அனைத்தும்*  ஆரக் கழுவினான்,*  கங்கை நீர்-
    பெய்து அனைத்துப் பேர் மொழிந்து பின்.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தரணி – பூமியை
அளப்ப நிவர்ந்து – தாவியளப்பதாகத் தொடங்கின தரிவிக்ரமாவதார காலத்தலே
நீட்டிய – பாப்பின்
பொன் பாதம் – அழகிய திருவடியை
கங்கை நீர் பெய்து – கங்க தீர்த்தமாகப் பெருகின கமண்டல தீர்த்தத்தைப்பணிமாறி

விளக்க உரை

எம்பெருமான் உலகளந்தருளினகாலத்தல் ஸ்ரீபாத தீர்த்தங்கொண்ட நான்முகனொருவனே பெருந்தவத்தோனென்கிறார். “குளைகொண்டு நான்முகன் குண்டிகை நீர்பெய்து, மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்திக் – கறைகொண்ட, கண்டத்தான் செனனிமேலேறக் கழுவினான், அண்டத்தான் சேவடியையாங்கு“ என்ற திருமழிசைப்பிரான் பாசுரங்காண்க. கங்கை நீர்பெய்து –நான்முகன் தனது கமண்டலதர்த்தைத்தைக் கொண்டு திருமாலின் திருவடியை விளக்கினதாக ப்ரமாணங்கள் சொல்லாநிற்க. இவர் ‘கங்கை நீர் பெய்து‘ என்கிறாரே, இது பொருந்துமோ? என்னவேண்டா, பிரமன் திருவடி விளக்கின கமண்டலத்தீர்த்தமே அடுத்த க்ஷணத்தில் கங்காதீர்த்தமாக ப்ரவஹிக்கப் பெற்றதனால் அதனையுட்கொண்டே “கங்கைநீர் பெய்து“ என்றருளிச் செய்யப்பட்டுள்ளது – என்றுணர்க. ஆகவே இங்குக் கங்கைநீர் என்றது – கங்கைநீர் ஆவத்ற்கு உறுப்பான கமண்டலதீர்த்தத்தைச் சொன்னபடி தரணி – வடசொல்.

English Translation

Of its own accord, the fortune of seeing the lord's golden that extended into the sky accrued to Brahma of great penance. Then reciting all the names known to him, he poured water, -that became the Ganga, -and washed the foot to his heart's content.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்