விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பெருகு மத வேழம்*  மாப் பிடிக்கு முன் நின்று,* 
  இரு கண் இள மூங்கில் வாங்கி,*  - அருகு இருந்த-
  தேன் கலந்து நீட்டும்*  திருவேங்கடம் கண்டீர்,* 
  வான் கலந்த வண்ணன் வரை.    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பெருகும் – பெருகுகின்ற
மதம் – மதநீரையுடைத்தான்
வேழம் – யானையானது
மா பிடிக்கு முன் நின்று – (தனது) சிறந்த பேடையின் முன்னே நின்று
இரு கண் இளமூங்கில் வாங்கி – இரண்டு கணுக்களையுடைத்தாய் இளையதான மூங்கில் குருத்தைப்பிடுங்கி
 

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் ‘பெருந்தமிழன் நல்லேன் பெரிது‘ என்று போரப்பொலியச் சொல்லிக்கொண்ட ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘நீர் நல்ல பெருந்தமிழர் என்பதை நாடுநகரமும் நன்கறி ஒருகவி சொல்லும், பார்ப்போம்‘ என்ன, அப்போ தருளிச்செய்த கவியாம் இது. வடதிருவேங்கடமாமலையை வருணிக்கிறார். மதம்பிடித்து மனம் போனபடி திரிந்துகொண்டிருந்த ஒரு யானையானது தன்பேடையைக் கண்டது, அதனைமீறி அப்பாற்செல்லமாட்டாமல் அதற்கு இனிய உணவுகொடுத்து அதனை த்ருப்தி செய்விக்க விரும்பி மூங்கில்குருத்தைப் பிடுங்கித் தேனிலே தோய்த்து அப்பேடையின் வாயிலே பிழிகின்றதாம், இப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு இடமான திருமலையானது நீலமேகநிறத்தனான எம்பெருமான் உவந்து எழுந்தருளி யிருக்குமிடம் என்றாராயிற்று. எம்பெருமான் பிராட்டியை உவப்பிக்கும்படியைக் கூறுதல் இதற்கு உள்ளுறை பொருள். பெரிய திருமொழியில் “வரைசெய்யாகளி றிளவெதில் வளர்முறை யளைமிகு தேன்தோய்த்தும், பிரசவசயீதன் இளம்பிடிக்கருள்செயும் பிரதிசென்றடைநெஞசே என்ற (1-2-5) என்ற பாசுரமும் இப்பொருள் கொண்டதே.

English Translation

The poetry of venkatam! Elephant bulls in rut stand before their cows and offer tender Bamboo shoots, dipped in the honey of hives above. It is the sky-hued Lord's abode in the mountains.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்