விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    போது அறிந்து வானரங்கள்*  பூஞ்சுனை புக்கு,*  ஆங்கு அலர்ந்த-
    போது அரிந்துகொண்டு ஏத்தும் போது,*  உள்ளம் போதும்- 
    மணி வேங்கடவன்*  மலர் அடிக்கே செல்ல,* 
    அணி வேங்கடவன் பேர் ஆய்ந்து.         

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வானரங்கள் – குரங்குகளானவை
போது அறிந்து – விடியற்கால முணர்ந்து (எழுந்துபோய்)
பூ சுனை புக்கு – புஷ்பித்த நீர்நிலைகளிலே புகுந்து (நீராடி)
ஏத்தும் – தோத்திரஞ் செய்யாநின்றன
உள்ளம் – மனமே!
 

விளக்க உரை

திருமலையில் திர்ய ஐந்துக்களான வானரங்களும் எம்பெருமானுக்குப் பணிவிடை செய்யும்படியை எடுத்துக்காட்டி நெஞ்சே! நீயும் அப்படி செய்ய வேணுமென்கிறார் பஞ்ச பஞ்ச உஷகாலத்திலே ரிஷிகள் நீயும் துயில்விட்டெம்மாபோலே குரங்குகளும் எழுந்து பூத்த கனைகளிலேசென்று ஸ்நாநம்பண்ணி அங்குள்ள செவ்விப் பூக்களைப் பறித்துக் கொண்டு போய் ஜாதிக்கு ஏற்றவாறு ஏதேனுமொன்றைச் சொல்லித் துதிசெய்து பணியா நிற்கும் நெஞ்சே! நீயும் அப்படி செய்யப்புறப்படு திருவேங்கட முடையானுடைய சீலம் முதலிய குணங்களும் வாசகமான திருநாமங்களை அநுஸந்தித்துக் கொண்டு நன்மலர்களை நாம் கொணர்ந்து அவனது திருவடித் தாமரைகளிர் சாத்துவாயாக. இப்பாட்டில் போது என்ற சொல் நான்கிடத்தில் வந்துள்ளதும் முதுலிலுள்ளதற்குக் காலமென்று பொருள், இரண்டாவதாகவும் நான்கால் முள்ளதற்கு புஷ்பமென்று பொருள், மூன்றாவது வினைமுற்றாய் புறப்படு என்னும் பொருளது. மூன்றாமடியின் முதற்சீர் மோனை யின் பத்திரகிணங்க ‘மணி‘ என்றிருக்க தகுமாதலால் “மணி வேங்கடவன்“ என்றல் சிறக்கும் நான்காம்படியின் முதலினும் அணி என்பதை வினைமுற்றாகக் கொள்ளலாம்.

English Translation

By the times of the day, monkeys on the hills of venkatam enter the flower groves. cull fresh flowers and offer worship. Arise, O Heart! Let us also gather flowers for the worship of the beautiful Venkatal Lord.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்