விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கோ ஆகி மா நிலம் காத்து,*  நம் கண் முகப்பே*
  மா ஏகிச் செல்கின்ற மன்னவரும்*  - பூ மேவும்-
  செங் கமல நாபியான்*  சேவடிக்கே ஏழ் பிறப்பும்* 
  தண் கமலம் ஏய்ந்தார் தமர்.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கோ ஆகி – ராஜாதி ராஜர்களாய்
மா நிலம் காத்து – பரந்த பூமண்டலத்தை அரசாட்சிபுரிந்து
நம் கண் முகப்பே – நம் கண்ணெதிரே
மா ஏகி செல்கின்ற – குதிரையேறித்திரிகின்ற
மன்னவரும் – அரசர்களும்,

விளக்க உரை

ஸலர்க்கலோகத்திலுள்ள தேவர்கள் எம்பெருமானைப்பற்றி தங்கள் பிரயோஜனம் பெற்றமை சொன்னார் கீழ்ப்பாட்டில், அவர்கள் மாத்திரமேயன்று பூலோகத்திலுள்ள அரசர்களும் எம்பெருமானை ஆராதித்தே மேன்மைபெற்றுப் பொலிகின்றன ரென்கிறா ரிப்பாட்டில். சக்ரவர்த்திகளென்று பட்டப் பெயர்பெற்று இந்நிலம் முழுவதையும் அரசாண்டுகொண்டு குதிரையேறிப் பவனி வருகின்ற பிரபுக்களும் தாமே பிரபுக்களாய் விடவில்லை. பத்மநாபனான எம்பெருமானுடைய திருவடிகளில் பல பிறவிகளில் தொண்டு செய்து அப்பெருமானுடைய அநுக்ரஹத்தினால் பிரபுக்களாயின் என்றாராயிற்று. “பூமேவுஞ் செங்கபலதாபியான்“ என்றதை உள்ளபடியே அந்வயித்து போகயதை, மேவும் – பொருந்தியிருக்கப்பெற்ற செங்கமலம் – செந்தாமரைப்பூவை, நாபியான் – திருநாபியிலுடையவன் என்றுரைக்கவுமாம். ஈற்றடியில் ‘ஏய்ந்தார்தமர்“ என்றதற்கு ‘ஏய்ந்தாருடைய பக்தர்களாய்க் கொண்டு‘ என்று பொருள்கூறி பகவத் பக்தர்களுக்குத் தொண்டுசெய்தே பிரபுக்களாயினர் என்று உரைத்தலுமாம்.

English Translation

The Powerful kings who go riding horses and rule the Earth too are devotees of the Lord. By worshipping with flowers through seven lives, the feet of the lotus-noval Lord they have become kings.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்