- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
பிரயோஜநாந்தரத்தை விரும்புமவர்களானாலும் தன்னை வந்து அடுத்தால் அவர்களது விருப்பத்தைப் படாதன பட்டும் தலைக்கட்டியளாருமவன் எம்பெருமான் என்கிறது இப்பாட்டு. முன்னொருகாலத்தில், இவ்வண்ட கோளத்திற்கு அப்புறத்திலுள்ள விஷ்ணுலோகத்திற், சென்று திருமகளைப் புகழ்ந்துபாடி அவளால் ஒரு பூமாலை ப்ரஸாதிக்கப்பெற்ற ஒரு வித்யாதரமகள், மகிழ்ச்சியோடு அம்மாலையைத் தன் கைவீணைமயில் தரித்துக்கொண்டு பிரமலோகவழியாய் மீண்டுவருகையில் “துர்வாஸமஹாகமுநி எதிர்ப்பட்டு அவளை வணங்கித் துதிக்க, அவ்விஞ்சைமங்கை அம்மாலையை அம்முனிவனுக்கு அளித்திட்டாள், அதன் பெருமையையுணர்ந்து அதனைச் சிரமேற்கொண்ட அம்முனிவன் ஆநந்தத்தோடு தேவலோகத்திற்கு வந்து, அப்பொழுது அங்கு வெகு உல்லாஸமாக ஜராவதாயானையின்மேற் பவனி வந்துகொண்டிருந்த இந்திரனைக்கண்டு அவனுக்கு அம்மாலையைக் கைநீட்டிக் கொடுக்க, அவன் அதனை மாவட்டியினால் வாங்கி அந்தயானையின் பிடரியின்மேல் வைத்தவளவில், அம்மதயானை அதனைத்துதிக்கையாற் பிடித்திழுத்துக் கீழெறிந்து காலால் மிதித்துத் துவைத்தது, அதுகண்டு முநிவரன் கடுங்கோபங்கொண்டு இந்திரனை நோக்கி ‘இவ்வாறு செல்வச் செருக்குற்ற உன்னுடைய ஐச்வரியங்களெல்லாம் கடலில் ஒளிந்துவிடக் கடவன‘ நின்று சபிக்க, உடனே தேவர்களின் செல்வம் யாவும் ஒழிந்தன. ஒழியவே, அசுரர்வந்து பொருது அமர்ரை வென்றனர்.
English Translation
The powerful elephant's tusk he pulled out, and killed it too! He came as powerful man-lion and killed the powerful Asura Hiranya. He rolled a powerful snake on a powerful mount and churned the ocean, He is a powerful king.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்