விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இது கண்டாய் நல் நெஞ்சே!*  இப் பிறவி ஆவது,* 
    இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது,*  - இது கண்டாய்-
    நாரணன் பேர் ஓதி*  நரகத்து அருகு அணையாக்,*
    காரணமும் வல்லையேல் காண்.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நல் நெஞ்சே – நல்ல மனமே
இப்பிறவி ஆவது இது கண்டாய் – இந்த ஸம்ஸாரத்தின் கொடுமை இப்படிப்பட்டது காண்.
நாம் உற்றது எல்லாம் இது கண்டாய் – (இந்த ஸம்ஸாரத்தில்) நாம் அநுபவித்த துக்கங்களெல்லாம் இப்படிப்பட்டவை காண்
நாரணன் – ஸ்ரீமந் நாராயணனுடைய
பேர் – திருநாமங்களை

விளக்க உரை

இந்த ஸம்ஸாரத்தின் கொடுமையைத் தம் திருவுள்ளத்திற்குஉரைக்க எடுத்தெடுத்துக் காட்டுகிறார். நன்னெஞ்சே! இப்பிறவியாவது இதுகண்டாய் – பிறப்பதும் இறப்பதுமாக நடந்து செல்லுகிற இந்த ஸம்ஸாரத்தின் நிலைமையை நெஞ்சே! தெரிந்துகொண்டிருக்கிறாயா? என்கை. நாம் உற்றதெல்லாம் இதுகண்டாய் – இதுவரையில் நாம் ஸுகதுக்கங்களை மாறி மாறி அநுபவித்து வருகிறோமே, அதற்குகாரணம் அந்த ஸம்ஸாரமேகிடாய் என்கை. நாரணன் பேரோதி நரகத்தருகளையாக் காரணமும் இது கண்டாய் – நித்யவிபூதியில் ஒரு முலையிலிருந்துகொண்டு ஸ்ரீமந்நாராயணனுடைய திருநாமங்களை ஸங்கீர்த்தநம் பண்ணிக்கொண்டு நரகப்ரணமான இந்நிலத்தின் அருகிலும் அஞகாதிருக்கவேணுமென்று இவ்விருள் தருமா ஞாலத்தில் நாம். வெறுப்புக் கொண்டிருப்பதற்குக் காரணமும் இந்த ஸம்ஸாரத்தின் தோஷங்களேயாம் – என்கை. (இவ்விபூதியின் தோஷங்களைக் கொண்டு இதை நரசு மென்றே ஞானிகள் சொல்லுவர்கள்)

English Translation

You too, O Good Heart! Have good sense to know that this, this, is the cause of cyclic births; this, this, is the effect of our actions; and that the name of Narayana alone can ensure safety from hell for us.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்