விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கதையின் பெரும் பொருளும் கண்ணா!*  நின் பேரே,- 
    இதயம்*  இருந்தவையே ஏத்தில்,*  - கதையின்-
    திருமொழியாய் நின்ற*  திருமாலே*  உன்னைப்-
    பரு மொழியால் காணப் பணி.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கண்ணா – கண்ணபிரானே!
கதையும் – இதிஹாஸ புராணங்களும்
பெரு பொருளும் – அவற்றின் சிறந்த அர்த்தங்களும்
இதயம் – அவற்றின் தாற்பரியமும்
இருந்த வையே – உள்ளது உள்ளபடியே

விளக்க உரை

இந்த லீலாவிபூதியில் இருந்துகொண்டு, உன்னுடைய குணசேஷ்டிதம் முதலியவற்றைப் பிரதிபாதிக்கின்ற இதிஹாஸ புராணமுகமாக உனது திருநாம ஸங்கீர்த்தனமாகிற பாக்கியம் எனக்கு வாய்ந்தாலும், நித்ய விபூதியில் வந்து சேர்ந்து “ஹாவு ஹாவு, அஹமந்த மஹமந்த அஹமந்நாதோ ஹமந்நாதோஹ மந்தாத“ என்று வாய்விட்டுப் பேசியநுபவிக்கும் படியான பூர்ணாநுபவத்தை எனக்குத் தந்தருளவேணுமென்கிறார். கதை என்ற ஸாமாந்யசப்தம் இங்கு பகவத்கதையான இதிஹாஸபுராணங்களென்று விசேஷப்பொருள் பெற்றுநிற்கும். ஸ்ரீராமாயணம் ஸ்ரீமஹாபாரதம் முதலான இதிஹாஸங்களையும், வைஷ்ணவம், பாத்மம் முதலான புராணங்களையும் மூலம்மாத்திரமே அநுஸந்தித்தாலும், அவற்றின் அர்த்தங்களை அநுஸந்தித்தாலும், அவற்றின் உட்கருத்தைக் கண்டறிந்து அநுஸந்தித்தாலும் எல்லாம் உன்னுடைய திருநாமங்களேயாயிருக்கு மென்பதில் ஸந்தேஹமில்லை, ஏனென்றால், கதையின் திருமொழியாய் நின்றதிருமாலே! – அந்த இதிஹாஸ புராணங்களின் அக்ஷரங்களாக அமைந்துள்ளவன் நீயே யாதலால் அவற்றைச் சொல்லுவதும் அவற்றின் அர்த்தங்களையும் தாத்பர்யங்களையும் அநுஸந்திப்பதும் உன்னுடைய திருநாம ஸங்கீர்த்தநமாகக் குறையில்லை யென்றவாறு.

English Translation

O substance of the epics, krishna O exalted language of the great epics. Tirumal Grant that I may chant your names, and praise you with exalted words and see you in the depth of my heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்