விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பேறு ஒன்றும் முன் அறியேன்*  பெற்று அறியேன் பேதைமையால்,* 
    மாறு என்று சொல்லி வணங்கினேன்,*  ஏறின்-
    பெருத்தெருத்தம் கோடு ஒசிய*  பெண் நசையின் பின் போய்,* 
    எருத்து இறுத்த நல் ஆயர் ஏறு.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பெண் நசையின் பின் போய் – நப்பின்னைப் பிராட்டி விஷயத்திலுண்டான ஆசைக்கு வசப்பட்டு,
ஏறின் – விருஷபங்களினுடைய
பெருத்த எருத்தம் – பெருத்த முசுப்புகளும்
கோடு – கொம்புகளும்
ஓசிய – முறியும்படியாக

விளக்க உரை

இப்படி ஆச்ரித பரதந்த்ரனானவனே என் பிரதிபந்தங்களைப் போக்கி அபேக்ஷிதங்களையும் தந்தருள்வனென்று அவனைப் பற்றினேனென்கிறார். நப்பின்னைப் பிராட்டியை மணம் புரிவதற்கு இடையூறாயிருந்த ஏழ் விடைகளையுமு வென்றடர்ந்து அவளை யணைந்துகொண்ட பெருமான் அவ்விதமாகவே நம்மோடு சேர்வதற்கும் பிரதிபந்தகமாயுள்ள பாவங்களைத் தொலைத்து நம்மையு மணைந்தருள்வனென்று கருதி அவன் திருவடிகளில் தலைசாய்த்தேன். அநாதிகாலம் அவிவேகியாய் இழந்தொழிந்த நான் இன்று இப்போது பெற்றேன் என்றாராயிற்று.

English Translation

Then I did not know my purpose, not learnt it from others, it was my tally. Desiring to change myself I OFFERED worship at the feet of Nappinnai's fighter-bull Lord who destroyed seven angry bulls.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்