விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அருள் புரிந்த சிந்தை*  அடியார்மேல் வைத்து,* 
    பொருள் தெரிந்து காண்குற்ற அப்போது,*  - இருள் திரிந்து-
    நோக்கினேன் நோக்கி*  நினைந்தேன் அது ஒண் கமலம்,* 
    ஓக்கினேன் என்னையும் அங்கு ஓர்ந்து.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அருள் புரிந்த சிந்தை – அருளோடு கூடின திருவுள்ளத்தை
அடியார் மேல் வைத்து – அடியவராகிய எங்கள் மேலே வைத்து
பொருள் தெரிந்து – அபதார்த்தமாகத் திருவுள்ளம் பற்றி
காண்குற்ற அப்போது – கடாக்ஷித்தருளுகிற காலத்திலே
இருள் இரிந்து – அஜ்ஞான விருள் நீங்கப் பெற்று

விளக்க உரை

எம்பெருமானுடைய நிர்ஹேதுக விஷயீகாரத்தையே பேசுகிறார் தாய்தந்தையர்க்கு மக்களிடத்தில் இயற்கையாக வாத்ஸல்யமிருப்பதுபோல எம்பெருமானும் அடியவராகிய நம்மிடத்து ஸஹஜமான வாத்ஸல்யத்தை நிலைநிறுத்தி அபதார்த்தமாய்க் கிடந்த நம்மைப் பதார்த்தமாக்கிக் கடாக்ஷித்தருளின படியாலே. எம்பெருமானுக்கும் நமக்குமுள்ள அநாதிஸம்பந்தத்தை அறியவொட்டாமல் தடையாய்க்கிடந்த அஜ்ஞானவிருள் தொலையப்பெற்று ஸ்வரூபஜ்ஞாநம்பெற்று அவனுடைய திருவடித்தாமரைகளை அநுஸந்திக்கப்பெற்றேன், அத்திருவடிகளிலேயே ஆத்மஸமர்ப்பணமும் பண்ணப்பெற்றேன் என்றாராயிற்று.

English Translation

With Lakshmi's grace falling on devotees, when the Lord revealed his true nature dispelling darkness, I was able to see clearly. With a clear vision I contemplated on the Lord's lotus feet and surrendered myself to him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்