விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நாம் பெற்ற நன்மையும்*  நா மங்கை நல் நெஞ்சத்து*
  ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து,*  - வேம்பின்-
  பொருள் நீர்மை ஆயினும்*  பொன் ஆழி பாடு என்று,*
  அருள் நீர்மை தந்த அருள்.          

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பாடு என்று – பாடக்கடவாய் என்று
நா மங்கை – ஸ்ரஸவதியானவள்
நெஞ்சத்து – (நமது) நல்ல நெஞ்சிலே
ஒம்பி இருந்து – ஆதரித்து இருந்து
எம்மை – நீர்மைக்கொண்டு

விளக்க உரை

“எனக்குத் தேனே பாலே நன்னலேயமுதே திருமாலிருஞ்சோலைக் கோனோகி“ என்று மஹான்களுக்கு எம்பெருமான் பரமபோக்யனாயிருப்பனாயினும் அரஸகனான பாவியேனுக்கு வேம்பாயிப்பன், ஆயினும் “இந்த பகவத் விஷயத்தை நீ பாடக்கடவை“ என்று எம்பெருமான் தானாகவே திருவருள் கூர்ந்து நியமித்ததன் பலனாகவே ஸரஸ்வதியானவள் நம்முடைய ஹருதயத்திலே வீற்றியிருந்து சப்தாரிகளைத் தொடுக்கச் செய்தாளென்கிறார். நாமங்கை – நாவில்வாழும்பெண், ஸரஸ்வதி, பொன்னாழிபாடு –பொன்னாழியைப்பாடு எனினும், பொன்னாழியையுடைய எம்பெருமானைப்பாடு எனினும் ஒக்கும்.

English Translation

Though praising the discus Lord has the bitterness of Neem, Dame sarasvali resides in our heart and motivates us to sing. This is our good fortune graced by the lotus-dame Lakshmi. '

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்