விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  திருமங்கை நின்றருளும்*  தெய்வம் நா வாழ்த்தும்,*
  கருமம் கடைப்பிடிமின் கண்டீர்,*  - உரிமையால்-
  ஏத்தினோம் பாதம்*  இருந் தடக்கை எந்தை பேர்,*
  நால் திசையும் கேட்டீரே நாம்?    
   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

திரு மங்கை – பெரிய பிராட்டியார்
நின்றருளும் தெய்வம் – நித்யவாஸஞ் செய்யப் பெற்ற எம்பெருமானை
நா வாழ்த்தும் கருமம் – நாவினாலே வாழத்துகையாகிற காரியத்தை
பாதம் – திருவடிகளையும்
பேர் – திருநாமங்களையும்

விளக்க உரை

எந்த தெய்வத்தை ஸ்ரீமஹாலக்ஷமி விரும்புகின்றாளோ அதுவே பரதத்துவம் என்பது வேதாந்தஸிந்தாந்தம், ஸ்ரீகுணரத்நகோசத்திலே பட்டர் “வேதாந்தாஸ் தத்வசிந்தாம் முரபிதுரஸி யத்பாதசிஹ்நைஸ் தரந்தி“ (அதாவது, இன்னது பரதத்துவம் என்று நிஷ்கர்ஷிக்கமாட்டாமல் கவலை கொண்டிருந்த வேதாந்தங்கள் ஸ்ரீமந்நாராயணனுடைய திருமார்பில் பிராட்டியின் அடிச்சுவடுகண்டு இவனே பரதத்துவமென்று நிர்ணயித்துக் கவலை தீர்ந்தன“) என்றருளிச்செய்த்துங்காண்க. ஆகப் பிராட்டி ஸம்பந்தத்தாலே மேன்மைபெற்ற தைவம் யாதொன்றுண்டு – ஸ்ரீமந்நாரயணன், அவனை நாவினால் வாழ்த்துந் தொழிலையே உறுதியாகக் கைப்பற்றுங்கோளென்கிறார் முன்னடிகளில். பிறர்க்கு உபதேசிப்பவர் தாம்முந்துற அநுஷ்டித்துக் காட்டவேணுமே, ஆதலால் ஸ்வாநுஷ்டானத்தை வெளியிடுகிறார் பின்னடிகளில் உரிமையால் –சேஷ சேஷித்வமாகிற ஸம்பந்த முறைமை கொண்டு என்றபடி. நாற்றிசையுங் கேட்டீரே – இதனை எல்லாருமறியவேணுமென்றவாறு.

English Translation

The golden abode of Sri-dame Lakshmi, the Lord is worthy of praise, so follow him diligently, Harken, ye four directions! It is our birth right to after worship at the feet of the Lord and praise him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்