விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  காணக் கழி காதல்*  கைமிக்குக் காட்டினால்,* 
  நாணப்படும் என்றால் நாணுமே?*  - பேணி- 
  கரு மாலைப்*  பொன் மேனி காட்டாமுன் காட்டும்,* 
  திருமாலை நங்கள் திரு.       

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

திருமாலை காண கழி காதல் – எம்பெருமானை ஸேவிக்க வேணுமென்று மிகுந்த விருப்பம்
கைமிக்கு காட்டினால் நாணப்பம என்றால் – மேன்மேலும் அதிகரித்தால் அடங்கியிருக்கவேணுமென்றால் அடங்கியிருக்க முடியுமோ?
கருமாலை – கரிய திருமாலாகிய அப்பெருமானை
பொன் மேனி காட்டா முன் – அவனது அழகிய திருமேனி தானே காட்டிக்கொடுப்பதற்கு முன்னே

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “இன்பக்கடலாழி நீயருளிக்காண்“ என்று பிரார்த்தித்தார், எல்லாப்பாட்டிலும் பாரதந்திரியமே வடிவாயிருக்குமவர் “எம்பெருமான் திருவுள்ளமானபடி செய்கிறான்“ என்று ஆறியிருக்கவேணுமேயன்றி இன்னது நீ செய்யவேணுமென்று அவனை நிர்ப்பந்திப்பது தகுதியோ என்று ஒருசங்கை பிறக்குமாதலால் அந்த சங்கைக்குப் பரிஹாரமாக இப்பாசுர மருளிச்செய்கிறாரென்க. அவனைப் பரிபூர்ணமாக ஸாக்ஷாத்கரித்து அநுபவிக்க வேணுமென்னுங்காதல் கிளராதிருக்குமாயின் நம்முடைய பாரதந்திரியம் ஜீவிக்கும் அக்காதல் அளவற விஞ்சிவிட்டால் ஸ்வரூபத்தை நோக்கி அடங்கியிருக்கவேணுமென்றால் யாரால் அடங்கியிருக்க முடியும்? ஸ்வரூவுணர்ச்சியினால் எவர் பதறாது அடங்கியிருக்கின்றனரோ, அவர்க்குக் காதல் உண்டாக வில்லையென்று கொள்ளவேணுமேயன்றி காதலுள்ளவர்கள் ஸ்வரூபவுணர்ச்சியினால் அடங்கியிருக்கிறார்களென்பது ஒருநாளுமில்லை. – என்பது முன்னடிகளின் கருத்து.

English Translation

When the desire to see the Lord swells like the ocean, is it possible to shy away even if one wishes to? Even before the lord reveals his dark form, the lotus-dame Lakshmi comforts us with showing his golden outline.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்