விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  என்றும் மறந்தறியேன்*  ஏழ் பிறப்பும் எப்பொழுதும்,* 
  நின்று நினைப்பு ஒழியா நீர்மையால்,*  - வென்றி-
  அடல் ஆழி கொண்ட*  அறிவனே,*  இன்பக்-
  கடல் ஆழி நீ அருளிக் காண்.   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வென்றி – ஜய சீலமாய்
அடல் – திக்ஷணமான
ஆழி – சக்கரத்தை
அறிவனே – ஸர்வஜ்ஞனான பெருமானே!
ஏழ் விறப்பும் – இப்படியிருக்கிற நீ எல்லா ஜன்மங்களிலும்

விளக்க உரை

பிரானே! இவ்விருள் தருமா ஞாலத்தில் உன்னை நினைப்பதென்பது எளிதில் கைகூடாத காரியம், ஆனாலும் 1.“எதிர்சூழல்புக்கு எனைத்தோர் பிறப்பு மெனக்கே யருள்கள் செய்ய, விதிசூழ்ந்ததா லெனக்கேலம்மான் திரிவிக்கிரமனையே“ என்றாற்போலே எப்படியாவது என்னை அகப்படுத்திக்கொள்ள வேணுமென்று நீ நெடுநாளாகவே க்ருஷிபண்ணிப்பொகையாலே உன்னுடைய நினைவு என்மேல் இடையறாது இருப்பதனாலே என்னுடைய நினைவும் உன்மேல் நிரந்தரமாக இருக்கின்றது. ஆனால் இவ்வளவோடு நான் திருப்தியடைபவ வல்லேன். 2. “அந்தமில் பேரின்பத்து அடியரோருந்தமை“ என்னப்படுகிற இன்பக்கடலையும் அவாஹிக்கப்பெறவேணுமென்று ஆவல் கொண்டிருக்கும்படியேனை அந்த இன்பக் கடலிலும் அழுந்தச் செய்தருளாய் – என்கிறார். “இன்பக்கடல்“ என்னுமளவே போதுமாயிருக்க “கடலாழி“ என்றது அப்பரமாநந்தத்தின் அளவில்லாமையை நன்கு காட்டுதற்கென்க. “இன்பம் ஆழிகடல்“ என்று இயைத்து, இன்பமாகிற ஆழ்கடல் என்று முரைக்கலாம் உன்னையே எப்போதும் சிந்தித்துக்கொண்டிருக்கு மடியேனை உன் திருவடிகளிற் சேர்த்துக் கொள்ளவேணு மென்றதாயிற்று இப்பாட்டால்.

English Translation

??????! ????????? ????? ????????? ????? ?????????????? ??????? ??????? ???????, ??????? 1.“???????????????? ????????? ??????? ??????? ???????? ?????, ????????????? ?????????????? ????????????????“ ??????????? ??????????? ????? ?????????????????? ?????????? ?? ??????????? ????????????????????? ???????? ?????? ??????? ???????? ??????????? ???????? ???????? ??????? ?????????? ????????????. ????? ????????? ???? ????????????? ???????. 2. “???????? ??????????? ?????????????“ ???????????? ?????????????? ??????????????????????? ???? ????????????????????? ???? ?????? ???????? ???????? ??????????? – ?????????. “??????????“ ????????? ????????????? “??????“ ?????? ????????????????? ???????????? ????? ??????????????. “?????? ???????“ ????? ???????, ????????? ??????? ????? ??????????? ??????? ????????? ???????????????????????? ??????? ??? ???????????? ?????????? ????????? ????????????? ???????????.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்