விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நிறம் கரியன் செய்ய*  நெடு மலராள் மார்வன்,* 
  அறம் பெரியன் ஆர் அது அறிவார்?*  - மறம் புரிந்த-
  வாள் அரக்கன் போல்வானை*  வானவர் கோன் தானத்து,*
  நீள் இருக்கைக்கு உய்த்தான் நெறி.       

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நிறம் கரியன் – (காளமேகம் போல்) கருநிறமுள்ளவனும்
செய்ய நெடு மலராள் மார்வன் – சிவந்த நிறத்தையுடையளாய்ப் பெரிய தாமரைப்பூவை யிருப்பிடமாக வுடையளான பெரிய பிராட்டியாரைத் திருமார்விலே யுடையனுமான எம்பெருமான்
அறம் பெரியன் – அருளில் பெருத்தவன்
மறம் புரிந்தவாள் – பகைபாராட்டின

விளக்க உரை

கொடியவர்களிடத்தும் ஈரநெஞ்சுடையனாயிருக்கை யென்னுங்குணம் ஆந்ருசம்ஸ்யம்‘ எனப்படும், அதாவது ஒருவர்க்குத் தீங்கு செய்யாமை. இக்குணம் எம்பெருமானிடத்தில் அமைந்திருக்கும்படியை ஒரு த்ருஷ்டாந்த முகத்தாற் கூறுகின்றாரிதில். காளமேகத்திருவுருவனாயும். அகலகில்லே னிறையுமென் றலர்மேல் மங்கையுரை மார்பனாயுமிருக்கிற ஸர்வேச்வரன். அறம் பெரியன் –‘ஆந்ருசம்ஸ்யம்‘ (தயை) என்னுங் குணம் பெரிது முடையான். இஃது எங்ஙனே தெரிகின்ற தென்னில், கேண்மின், எம்பெருமான் ஸர்வபூதஸு ஹ்ருத்தாகையாலே அவனுக்கு நேரே ஒருவனும் பகைவனல்லன், ஆச்ரிதர்களுக்கு எவன் விரோதியோ, அவனையே எம்பெருமான் தனக்கு விரோதியாகக் கருதுவன். கண்ணபிரானாய்த் தூதுபோமிடத்துத் துரியோதனை நோக்கிச் சொல்லும்போது எனது உயிர்நிலையான பாண்டவர்களுக்கு நீ விரோதியாகையாலே எனக்கு நீ விரோதியாகின்றாய், என்றருளிச் செய்துள்ளது குறிக்கொள்ளத்தக்கது. ஆகவே, ஆச்ரிதனான அம்முகத்தாலே எம்பெருமானுக்கும் விரோதியாயினன். இப்படிப்பட்ட மாவலியை இராவணனைப்போலவே தலையறுத்து ஒழிக்கவேண்டியது ப்ராப்தமாயிருந்தும் ஔதார்யமென்னும் ஒரு குணத்தைக் கைக்கொண்டிருந்தானென்று இதனை ஒரு வியாஜமாக்கி அவனைத் தலைதுணித்திடாது நெடுங்காலம் பாதாளத்தில் குடிசெய்து வாழுமாறு விட்டருளின பெருங்குணத்தை நோக்குங்கால் ஸ்ரீமந்நாராயணனில் விஞ்சின தயாளு இல்லை‘ என்பது விளங்குமே என்கிறார். “வானவர்கோன் தானத்து“ – வானவர்கோன் தானமென்று ஸ்வர்க்கலோகத்திற்குப் பெயராயினும், அதுபோல் விலக்ஷணமான பாதாளலோகமென்பது இவ்விடத்திற்குப் பொருள்

English Translation

The Dark Hued Lord has the red-lotus-dame Lakshmi on his chest. He is Dharma personified. He despatched the armed Rakshasa king to the kindoom of Indra in the sky. Who understands his austerily?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்