விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அழைப்பன் திருமாலை*  ஆங்கு அவர்கள் சொன்ன,*
    பிழைப்பு இல் பெரும் பெயரே பேசி,*  - இழைப்பு அரிய-
    ஆயவனே! யாதவனே!*  என்றவனை யார் முகப்பும்,*
    மாயவனே என்று மதித்து.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இழைப்பு அரிய – ஆராய்வதற்கு அருமையான ஸ்வரூப ஸ்வபாவங்களையுடைய
ஆயவனே என்றும் – கோபால க்ருஷ்ணனே!என்றும்
மாயவனே என்றும் – (குணசேஷ்டிதங்களினால்) ஆச்சரியபூதனே என்றும்!
மதித்து – அநுஸந்தித்துக் கொண்டு
ஆங்கு அவர்கள் சொன்ன – அத்திருவாய்ப்பாடியிலுள்ளவர்கள் சொல்லியழைத்த யதுகுலத்தில்

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “முலைசூழ்ந்த நஞ்சுரத்துப் பெண்ணை நவின்றுண்டநாவன்“ என்று திருவாய்ப்பாடியில் நடந்த பேய்ச்சி முலைசுவைத்த கதையைப் பேசினபடியால் இப்பாட்டில் “ஆங்குஅவர்கள்“ என்றதற்கு அத்திருவாய்ப்பாடியிலுள்ள ஆய்ச்சிகள் என்று பொருளாகக் குறையில்லை பிரகரணபலத்தினாலென்க. ஆங்கவர்கள் சொன்ன பிழைப்பில் பெரும் பெயர்களாவன – கற்றின் மேய்த்தவன். வெண்ணெய்த்திருடன், தாம்பாலாப்புண்டவன், உரலிடைக்கட்டுண்டவன் என்றிவைபோன்ற திருநாங்களாம். இவை பெரும்பெயர்களாகுமோ, சிறுபெயர்களன்றோ இவை என்று சிலர் நினைப்பர். அவதாரத்தில் எளிமைக் குணத்தைக் காட்டி நிறும்பெற நினைத்த கண்ணபிரானது திருவுள்ளத்தால் நாராயணாதி நாமங்களே சிறுபேர் என்றும் கோவிந்த, நவநீதசோராதி நாமங்களே பெரும்பேரென்றும். நிச்சயிக்கத்தகும். திருப்பாவையில் ஆய்ச்சிகள் கண்ணபிரானை நோக்கி அடிக்கடி ‘நாராயணன்‘ என்று சிறு பேரையிட்டுச் சொன்னதற்கு அநுதபித்து உன்றன்னைச் சிறுபே ரழைத்தனவுஞ் சிறியருளாதே“ என்று பொறுப்பித்துக்கொண்டது காண்க. அவன் திருவுள்ளமுகக்குந் திருநாமமேயன்றோ பெரும்பேர் ஆவது! “திவத்திலும் பசுநிரை மேய்ப்பு உவத்தி செங்கனிவா யெங்களாயர் தேவே“ என்னப்படுகின்ற எம்பெருமான் திருவுள்ளமுகக்குந் திருநாமம் நாராயணாதி நாமங்களாக எப்படியாகும்? கோவிந்த கோபாலாதி நாமங்களேயாகுமென்க. பிழைப்பு இல் பெரும் பெரே – ‘பிழைப்பு‘ என்பதற்கு ‘ஜீவித்தல்‘ என்றும் பொருள் கொள்ளலாம், விட்டு உயிர்தரிக்க முடியாத பெரும்பெயர் என்றவாறு. “ஒருத்திமகனாய்ப் பிறந்து ஓரிரவிலொருத்தி மகனாய் ஒளித்துவளர“ என்கிறபடியே யதுகுலத்திற் பிறந்து இடைக்குலத்தில் வளர்ந்ததற்கேற்ப “யாதவனே! ஆயவனே! என்றது.

English Translation

Without fear I shall openly call before all, "O Yadava! O cowherd! O wonder Lord!", and all such names that they called him by, when the Lord protected them in many ways.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்