விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மலை ஏழும்*  மா நிலங்கள் ஏழும் அதிர* 
  குலை சூழ் குரை கடல்கள் ஏழும்,*  - முலை சூழ்ந்த-
  நஞ்சு உரத்துப் பெண்ணை*  நவின்று உண்ட நாவன் என்று*
  அஞ்சாது என்நெஞ்சே! அழை. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

என் நெஞ்சே – எனது மனமே!
மலை ஏழும் – ஸப்த குலபர்வதங்களும்
மா நிலங்கள் ஏழும் – ஸப்தத்வீபங்களும்
குலை சூழ் குரை கடல்கள் ஏழும் – கரையாலே சூழப்பட்டு ஒலிசெய்கிற ஸப்த ஸாகரங்களும்
அதிர – அதிரும்படியாக

விளக்க உரை

நெஞ்சே! எம்பெருமான் செய்தருளின மஹோபகாரங்களை எடுத்துரைக்கக் கேட்டாயன்றோ, இப்படிப்பட்ட மஹோபகாரங்களை அநுஸந்தித்தால் நாம் வாயடைத்துக் கிடக்கக் கூடுமோ? உலகங்களெல்லாம் அதிரும்படி அப்பெருமான் திருநாமங்களைச் சொல்லிக் கதறவேண்டாவோ, மிகபெரியோனான் அவனை மிக நீசரான நாம் எப்படி வாய்கொண்டு பேசலாம் என்று நீ அஞ்சியிருக்கிறாய் போலும், அச்சத்தை ஒழித்திட்டு உரக்கக் கூப்பிட்டழை என்கிறார். ‘மலையேழும் மாநிலங்களேழும் குலைசூழ்குலைகடல்களேழும் அதிர‘ என்ற விது ‘அழை‘ என்ற வினைமுற்றிலே அந்வயிக்கும். “விண்ணெல்லாங் கேட்க அழுதிட்டாய்“ என்றாற்போலே ஸப்தலோகமுங்கேட்கக் கூப்பிடவேணுமென்கிறார். நாடுநகரமும் நன்கறிய பகவத்கீர்த்தநம் பண்ணவேணுமென்கை.

English Translation

Let the seven hills, the seven continents and the seven oceans resound with his name, O Hearth! Call out loud and clear, "O Lord who sucked the poison breast of the ogress with joy!" Do not be afraid.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்