விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தன்நேர் ஆயிரம் பிள்ளைகளோடு*  தளர்நடைஇட்டு வருவான்* 
    பொன் ஏய் நெய்யொடு பால் அமுது உண்டு*  ஒரு புள்ளுவன் பொய்யே தவழும்*
    மின்நேர் நுண்ணிடை வஞ்சமகள் கொங்கை துஞ்ச*  வாய்வைத்த பிரானே!* 
    அன்னே! உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பொன் ஏய் - (நிறத்தால்) பொன்னை ஒத்திராநின்ற;
நெய்யோடு - நெய்யோடுகூட;
பால் அமுது - போக்யமான பாலையும்;
தன் நேர் - (வயஸ்ஸாலும் வளர்த்தியாலும்) தன்னோடு ஒத்த;
ஆயிரம் பிள்ளைகளோடு - ஆயிரம் பிள்ளைகளோடு கூட;

 

விளக்க உரை

கண்ணன் திருவாய்ப் பாடியிலே வந்து பிறந்தபோது அவனோடு கூட ஆயிரம் பிள்ளைகள் பிறந்தார்கள் ஆகையால், இளமைத் தொடங்கி தன்னை விட்டுப் பிரிய மாட்டாதவர்களாய் தன்னோடு கூடவே விளையாடித் திரிகின்ற அப்பிள்ளைகளோடேயே ஸ்ரீகிருஷ்ணன் திரிதலால் “தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர்நடையிட்டு வருவான்” என்றும் இப்படி தளர்நடை இடுபவன் ஒவ்வொரு வீட்டிலும் புக்கு அங்குள்ள தயிர் நெய் பால் முதலியவற்றை எல்லாம் திருடி வயிறார விழுங்கிவிட்டு ‘இந்தப் பூனை இந்தப் பாலை குடிக்குமா?’ என்னும்படி தவழ்ந்து நடை கற்பனாதலால் “பொன்னேய் நெய்யோடு பாலமுண்டு பொய்யே தவழும் புள்ளுவன்ன” என்றும் விளிக்கிறார். இரண்டும் அண்மை விளி; இயல்பு (மின்னோ இத்யாதி) உனக்கு ஒருத்தி முலைக்கொடுக்க வந்து தான் பட்ட பாட்டை நான்றிந்துள்ளேன் ஆதலால் “நம்மையும் அப்பாடு படுத்துவனோ” என்றஞ்சுகிறேன் என்கிறாள். அன்னே- அச்சக்குறிப்பிடைச் சொல், தூங்க என்னும் பொருளதான துஞ்ச என்ற சொல்லை ‘சாவு’ என்ற பொருளில் பிரயோகிப்பது - மங்கல வழக்காம்; தீர்க்க நித்திரை அடையும்படி என்பது கருத்து; ‘முன்னத்தினுணருங் கிளவியுமுளவே” என்றார் நன்னூலாரும்.

English Translation

With a thousand boys like you around, you come home dragging your feet. Gulping sweet milk and golden Ghee, you pretend to crawl like a child. O Lord, you sucked the life of the slender-waisted deceiver Putana. O My! I know you now, I fear to give you suck.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்