விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாலை அரி உருவன்*  பாதமலர் அணிந்து,* 
    காலை தொழுது எழுமின் கைகோலி,*  - ஞாலம்-
    அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த*  அண்ணலை மற்று அல்லால்*
    உளம் கிடந்த ஆற்றால் உணர்ந்து.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஞாலம் – பூமி முழுவதையும்
அளந்து – ஒரு கால் அளந்தும்
இடந்து – மற்றொருகால் (வராஹமாகி) இடந்தும்
உண்டு – (பிரளயத்தில்) திருவயிற்றினுள் வைத்தும்
உமிழ்ந்த – பிறகு வெளிப்படுத்தியும் இப்படியெல்லாம் (ரக்ஷணத்தொழில்) செய்த

விளக்க உரை

கீழ்ப்பாட்டிற் கூறியபடியே பல திருப்பதிகளில் கோயில் கொண்டெழுந்தருளி யிருக்குமவனுடைய திருவடிகளிலே புஷ்பார்ச்சனை பண்ணி “சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன் பொற்றாமரையடியே போற்றும்“ என்கிற பதியிலும் ஒவ்வொரு விபவாவதாரத் திருமேனியோடே ஸேவை ஸாதித்தருளுகின்ற னாகையால் உபலக்ஷணமாக ஒரு திருமேனியை யெடுத்துக் கூறுகின்றார் ‘அரியுருவன்‘ என்று. எம்பெருமானை ஆராதிக்கும்போது ‘இது நமக்கு ஸ்வரூப ப்ராப்தம்‘ என்றே ஆராதிக்க வேண்டுமாயினும் குணைர்தாஸ்ய முபாகத“ என்கிறபடியே திருக்குணங்களுக்குத் தோற்று அடிமைசெய்யும் முறைமையும் ஒன்றுண்டாகையாலே அத்திருக்குணங்களுக்கு ப்ரகாசமாக அப்பெருமான் செய்தருளின பெருநன்றிகளைப் பாராட்டிக் கொண்டே அடிபணிய வேணுமென்கைக்காக ஞாலமளந்திடந் துண்டுமிழ்ந்த அண்ணலை‘ என்கிறார். மாவலியைச் செருக்கடக்கி மண்ணளந்த மஹாகுணத்தையும் ஹிரண்யாக்ஷனைக் கொன்று பூமியைமீட்டுக் கொணர்ந்த மஹோபகாரத்தையும் பிரளயங்கொள்ளாதபடி உலகங்களைத் திருவயிற்றிலே அடக்கிக் காத்தருளின பெரு நன்றியையும், பிறகு வெளிப்படுத்தின குணத்தையுமு வாய்வெருவிக்கொண்டு தொழுதெழுங்கள் என்றவாறு. இப்படி நாட்டுக்குப் பொதுவாகச் செய்த உபகாரங்கள் மாத்திரமன்றியே 1. “மருவித்தொழும் மனமேதந்தாய்“ 2.“என்னைத் தீமனங்கெடுத்தாய்“ என்றிப்படி பெரியார் மனமுருகி அநுஸந்திக்கும் ஐகாந்திகமான உபகாரங்களும் பலவுண்டாகையால் அப்படிப்பட்ட மஹோபகாரங்களையுங்கூட அநுஸந்திக்கவேணு மென்கிறது ஈற்றடி. 3. “எத்திறம்! உரலினோ மணைந்திருந் தேங்கிய வெளிவே!“ என்றும் 4. “பிறந்தவாறும் வளர்ந்தவாறும்!“ என்றும் மிக ஈடுபட்டு அநுஸந்திக்கும் குணசேஷ்டிதங்களும் ஈற்றடிக்குப் பொருளாம்.

English Translation

Other than the Lord who came as a lion at dusk, you may also worship any dear-to-your-heart-deity every morning. Strewing flowers with folded hands. For, is not our lord the one who measured, lifted ate and remade the Earth?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்