விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தோள் இரண்டு எட்டு ஏழும்*  மூன்றும் முடி அனைத்தும்* 
  தாள் இரண்டும் வீழச் சரம் துரந்தான்,*  - தாள் இரண்டும்-
  ஆர் தொழுவார் பாதம்*  அவை தொழுவது அன்றே,*  என்-
  சீர் கெழு தோள்*  செய்யும் சிறப்பு?

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தோள் இரண்டு எட்டு எழும் மூன்றும் – இருபது தோள்களும்
வீழ – முடியும்படி
சரம் துரந்தான் – அம்புகளைச் செலுத்தின பெருமானுடைய
தாள் இரண்டும் – இரண்டு திருவடிகளையும்
தொழுவார் ஆர் – தொழுகிறவர்கள் எவரோ (அவர்களது)

விளக்க உரை

எம்பெருமானுடைய திருத்தோள்களைத் தொழுவதைப் புருஷார்த்தமாகக் கீழ்ப்பாட்டி லருளிச்செய்தார், ‘அவனுடைய திருத்தோள்களைத் தொழவேணுமென்னும் நிர்ப்பந்தம் எனக்கில்லை, அவனுடைய திருவடிகளைத் தொழுமவர் எவரோ அவருடைய திருவடிகளைத் தொழுவதே எனக்குப் புருஷார்த்தம் என்கிறார். இப்பாட்டில் எம்பெருமானிடத்து அன்பு செய்வதிற்காட்டிலும பாகவதர்களிடத்து அன்பு செய்வதே சிறந்த தென்னும் நூற் கொள்கை இதில் தழுவப்பட்டதென்க. “ஸித்தர் பவதிவா நேதி ஸம்சயோ ச்யுதஸேவிநாம் நஸம் கியோ ஸ்தி தத்பக்தபரிசர்யாதாத்மநாம்“ எம்பெருமானை அடிபணிந்தவர்களுக்குப் பேறு தப்பாமல் கிடைக்குமென்று துணிந்து சொல்லமுடியாது, ஸந்தேஹமுண்டு. பாகவதர்களை அடிபணிந்தவர்களுக்கு அப்படிப்பட்ட ஸந்தேஹத்திற்கிடமில்லை. பேறுகைபுகுந்தே தீரும்“ என்று சாஸ்த்ரங்களிற் சொல்லியிருப்பது ஆக இப்படி சித்திரவதம் செய்தமையைத்தெரிவிக்கிறபடி. என்சீர்கெழுதோள் செய்யுஞ் சிறப்பு – உலகத்தில் எல்லா மனிதர்களுக்கும் பொருளைக் கவர்தல், நல்லாரைக் கொல்லுதல் முதலிய தொழில்களைச் செய்து கொள்வர் எனது கைகள் அப்படிப்பட்ட தொழில்களில் எனக்கு உதவிபுரிய வேண்டா, பாகவதர்களைத் தொழுவதற்கு உறுப்பாகுமேல் இதுவே எனக்குச் செய்த மஹோபகாரமென்கிறார்.

English Translation

Alone He cast his arrows and cut the ten heads and twenty arms of the Lanka king. Those who worship his feet are my master, My fortune favoured hands worship the feet of these SPECIAL people.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்