- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
முன்னடிகட்குப் பலவகையாகப் பொருள்கொள்ள இடமுண்டு. கீழ்ப்பாட்டில் காம புருஷார்த்தத்தை நிந்தித்தார்: விஷயபோகங்கள் கர்ம புருஷார்த்தத்தைச் சேர்ந்தவையாதலால் அவற்றை ஹேயமென்பது காம புருஷார்த்தத்தை ஹேயமென்ற வாறாம். இப்பாட்டில் அர்த்த புருஷார்த்தத்தை நிந்திக்கிறார். விசேஷமாகப் பொருள்களை ஸம்பாதித்து அவற்றால் யஜ்ஞாயாகங்களைப் பண்ணி அவற்றின் பலனாக ஸ்வர்க்கலோகத்தை யடைந்து ஸுகிப்பது - என்றொரு வழியுண்டே; அவ்வழியையும் மேற்கொள்ளவேண்டா வென்கிறது. பொருளால் அமருலகம் புக்கியலாகாது = அர்த்த புருஷார்த்த மென்கிற திரவியங்களைக் கொண்டு ஸ்வர்க்கலோகத்தைப் பெறுவோமென்று அதற்கு முயற்சி செய்யலாகாது என்றபடி. அன்றியே, பொருளால் = இது நமக்குப் புருஷார்த்தம் என்னும் புத்தியோடே, ஸ்வர்க்கலோக ப்ராப்தியை விரும்பி அதற்காக நீங்கள் எம் பெருமானையே அடிபணிந்தால் அவன் கருத்தறிந்து காரியஞ்செய்யுமவனாகையால் ‘நம்மை அடுத்திருக்கு மிவர்களுக்கு ஸ்வர்க்கத்தில் நசையாகில் அதையும் அநுபவித்துத் தீரட்டும்’ என்று கிருபை பண்ணியருள்வன்; அதற்காக நீங்கள் தனிப்பட ஒரு ப்ரயாஸங்கொள்ள வேண்டா; எது வேணுமானாலும் மணிவண்ணன் பாதமே நினைக்கத்தகும் - என்கிறார்.
English Translation
With certainty contemplate, and never forget, -O Heart!, -the feet of the gem-hued Lord who gave himself to the vedic seers. Wealth cannot give us entry into the world of celestials. That righteous world is got by the grace of the Lord alone.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்