விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஓத்தின் பொருள் முடிவும் இத்தனையே,*  உத்தமன் பேர்-
    ஏத்தும்*  திறம் அறிமின் ஏழைகாள்,*  ஓத்து அதனை-
    வல்லீரேல் நன்று அதனை மாட்டீரேல்,*  மாதவன் பேர்-
    சொல்லுவதே ஓத்தின் சுருக்கு.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஓத்து அதனை - வேதமோதுவதாகிற காரியத்தை(ச் செய்ய)
வல்லீர் ஏல் - ஸமர்த்தர்களா யிருப்பீர்களாகில்
நன்று - அப்படியே வேதமோதுவது நல்லது;
அதனை மாட்டீர் ஏல் - அது செய்ய சக்தியற்றவர்களாகில்
மாதவன் பேர் - திருமாலின் திருநாமங்களை

விளக்க உரை

ஸ்கல வேத வேதாந்த விழுப்பொருளை உங்கட்குச் சுருக்கமாகச் சொல்லுகின்றேன் கேளுங்கள்; சக்தியுண்டாகில் வேதங்களை அதிகரித்து அவற்றின் மூலமாக ஸ்ரீமந்நாராயணனது திருநாமங்களை ஸங்கீர்த்தனம் பண்ணுங்கள் “வேதாக்ஷராணி யாவந்தி படிதாநி த்விஜாதிபி: தாவந்தி ஹரிநாமாநி கீர்த்திதாநி ந ஸம்சய:” (அதாவது - அந்தணர்களால் வேதத்தின் எத்தனை அக்ஷரங்கள் ஓதப்படுகின்றனவோ அத்தனையும் பகந் நாமங்களே ஓதப்பட்டனவவ் என்றாற்போலே வேதாக்ஷரங்களைக் கொண்டே ஹரிநாம ஸங்கீர்த்தநம் பண்ணுங்கள் என்றவாறு) அதில் சக்தியும் அதிகாரமுமில்லா தவர்களா யிருப்பின் ‘கேசவா!, கோவிந்தா!, மாதவா!, மதுஸூதநா!’ என்றாவது சொல்லிக் கொண்டிருங்கள். எவ்வகையினாலாவது எம்பெருமானது திருநாமங்களை ஸங்கீர்த்தநம் பண்ணவேணுமென்பதே ஸகல்வேத தாத்பர்யமாகும். “த்யாயந் க்ருதே யஜந் யஜ்ஞை: த்ரேதாயாம் த்வாபரே ர்ச்சயந் யதர்ப்நோதி ததாப்நோதி கலௌ ஸங்கீர்த்ய கேசவம்” கிருதயுகத்தில் தியானஞ் செய்வதாலும் த்ரேதாயுகத்தில் வேள்விகள் செய்வதாலும், த்வாபரயுகத்தில் அர்ச்சிப்பதாலும் எவ்விதமான பேற்றைப் பெறுகிறானோ, அவ்விதமான பேற்றை கலியுகத்தில் திருநாம ஸங்கீர்த்நத்தினால் பெறுகிறான் என்று சாஸ்த்ரங்களிற் சொல்லப்பட்டுள்ளது காண்க: இதுபற்றியே “ஓத்தின் பொருள்முடிவு மித்தனையே” என்றும் “மாதவன் பேர் சொல்லுவதே ஓத்தின்சுருக்கு” என்றும் இதிற் சொல்லப்பட்டது.

English Translation

The learned vedas says this in one voice, O people! know the power of praise, Good if you can master the sacred texts. If not, the name Madava alone will suffice.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்