விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  இரும் தண் கமலத்து*  இரு மலரின் உள்ளே,* 
  திருந்து திசைமுகனைத் தந்தாய்,*  - பொருந்திய நின்-
  பாதங்கள் ஏத்திப்*  பணியாவேல்,*  பல் பிறப்பும்-
  ஏதங்கள் எல்லாம் எமக்கு. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

இரு - பெரிய
தண் - குளிர்ந்த
கமலத்து - திருநாபிக்கமலத்தின்
இரு மலரின் உள்ளே - பெருமை பொருந்திய பூவில்
திருந்து - ஸமர்த்தனான

விளக்க உரை

கீழ்ப்பாட்டிலருளிச் செய்தபடி எம்பெருமானிடத்து அந்வயிப்பதற்குப் பாங்கல்லாத பிறவிகள் வீண் என்கிறார். எம்பெருமான் ஆத்மாக்களுக்குப் பல ஜன்மங்களை யுண்டாக்குவது ஒரு ஜன்மததிலில்லாவிட்டாலும் ஒரு ஜன்மத்திலாவது இவை நம்மை ஆச்ரயித்து ஈடேறவேணுமென்னும் விருப்பத்தினாலேயே இந்த விருப்பம் நிறைவேறாவிடில் ஆத்மாக்களுக்கு நேர்கின்ற பிறவிகளெல்லாம் வியர்த்தமேயென்க. பின்னடிகளுக்கு வேறு வகையாகவுங் கருத்துரைக்கலாம்; எனக்கு நேர்ந்த பல பிறவிகளும் உன் நினைவின்படி உன்னை ஆச்ரயிப்பதற்கு உறுப்பாகவேணும். அங்ஙனம் ஆகாவிடில், உலகத்திலே பிறக்கின்ற உயிர்களின் துயரமெல்லாம் என்னொருவனுக்கு உண்டாகும் - என்று இக்கருத்தில், ஏதங்கள் - துக்கங்கள் என்கை. முன்னடிகளில், ‘ நான்முகனை உந்திக்கமலத்தில் தோற்றுவித்தவனே!’ என விளித்தது - முமுக்ஷûக்கள் சரணம் பற்றுதற்கு உரியவனே! என்றபடி; இப்பொருள் எங்ஙனே கிடைக்குமெனில்; “யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்... முமுக்ஷûர்வை சரணமஹம் ப்ரபத்யே” (முதலில் பிரமனைப் படைப்பவன்யாவனோ அப்பெருமானை முமுக்ஷுவாகிய நான் சரணம் புகுகின்றேன்) என்பதாக உபநிஷத்தில் ஓதியிருப்பதுகொண்டு இப்பொருள் கிடைக்குமென்பது பெரியவாச்சான்பிள்ளை திருவுள்ளம்.

English Translation

Again and again taking birth in this body, if we have not learnt to worship your perfectly matching lotus feet, all these lives are a total waste. O Lord! On your lotus navel sits brahma the creator!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்