விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வகையால் அவனி*  இரந்து அளந்தாய் பாதம்,*
  புகையால் நறு மலரால் முன்னே,*  - மிக வாய்ந்த-
  அன்பு ஆக்கி ஏத்தி*  அடிமைப்பட்டேன் உனக்கு,* 
  என் பாக்கியத்தால் இனி.      

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

முன்னே - முற்காலத்திலே
வகையால் - உபாயத்தினால்
அவனி - பூமியை
இரத்து - (மாவலிபக்கல்) யாசித்து
அளந்தாய் - அளந்து கொண்டவுன்னுடைய

விளக்க உரை

கீழருளிச் செய்தபடி தம்முடைய மதோவாக்காயங்கள் எம்பெருமான் பக்கலிலேயே ஊனமுற்றதற்குக் காரணம் - அந்த எம்பெருமான் மஹாபலியிடத்தினின்று பூமியை மீட்டு இந்திரனுக்குத் தருவதென்கிற வியாஜத்தாலி எல்லார் தலையிலும் திருவடியை வைத்து வாழ்வித்தது போல, தம் தலைமேலும் திருவடிகளை வைத்து விசேஷகடாக்ஷஞ் செய்தருளின தேயாமென்பது இப்பாட்டில் தோன்றும். வகையால் - தந்திரத்தாலே யென்றபடி; இராவணன் போலவே மாவலியும் தேவர்களுக்குத் தீங்கிழைத்தவனாதலால் ராவணனைக் கொன்றொழித்தது போலவே இவனையுங் கொல்ல வேண்டியிருந்தும், இவன் உதாரகுணமொன்றை மேற்கொண்டிருந்ததனால் இவனைக் கொல்லவேண்டாவென்று கொண்டு மூவடியிரந்து பெறுகிற இச்செயலிலேயே பூமியை இந்திரனுக்குச் சேர்ப்பித்தலும் மாவலியை அடக்குதலுமாகிற இரண்டும் எளிதிற் கைகூடுமென்று நினைத்துச் செய்த தந்திரம் அறிக. இனி, வகையால் என்பதற்கு வடிவழகு, மழலைச்சொல், மனத்தைக் கவரவல்ல செயல் முதலிய வகைகளாலே என்றுரைக்கவுமாம். அவநி - வடசொல்.

English Translation

O Lord who begged for land and measured the Earth! By my good fortune, the love that I earlier made to you with incense and flowers has grown to make me surrender to your worthy feet as my refuge.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்