விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பிரான் என்றும் நாளும்*  பெரும் புலரி என்றும்,* 
  குரா நல் செழும் போது கொண்டு,*  - வராகத்து-
  அணி உருவன்*  பாதம் பணியும் அவர் கண்டீர்,*
  மணி உருவம் காண்பார் மகிழ்ந்து.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பிரான் என்றும் - ‘மஹோபகாரங்கள் பண்ணினவனே!’
பெரு புலரி என்றும் - ‘இன்றே நல்விடிவு’ என்றும் (கொண்டாடிக்கொண்டு)
நாளும் - நாள்தோறும்
நல்குரா - நல்ல மணம்மிக்க
செழு - அழகிய

விளக்க உரை

ஆபத்பந்துவான பகவானுடைய திருவடிகளில் செண்பக மல்லிகையோடு செங்கழுநீரிருவாட்சி முதலிய புஷ்பங்களைப் பணிமாறித் தொழுமவர்கள் அப்ராக்ருதமான அப்பரமனது திருமேனியை ஸேவித்து நித்யாநந்தம் அநுபவிக்கப் பெறுவர்களென்கிறார். (பிரானென்னும் பெரும்புலரியென்றும் பணியுமவர் கண்டீர்.) ஸ்ரீவசநபூஷணத்திலே - “அஜ்ஞரான மநுஷ்யர்கள் வாளா தந்தானென்றிருப்பர்கள்; ஜ்ஞாநவான்கள் ‘இன்றென்னைப் பொருளாக்கித் தன்னையென்னுள்வைத்தான் - எந்நன்றி செய்தேனோ என்னெஞ்சில் திகழ்வதுவே - நடுவே வந்து உய்யக்கொள்கின்ற நாதன் - அறிய தனவறிவித்த அத்தா நீ செய்தன அடியேனறியேனே - பொருளல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமைகொண்டாய் - என்னைத் தீமனங்கெடுத்தாய் - மருவித்தொழும் மனமே தந்தாய்’ என்று ஈடுபடா நிற்பார்கள்” என்றருளிசி செய்தவை இங்கு அநுஸந்திக்கத்தக்கன. பிரானே! என்றும் பெரும்புலரி என்றும் சொல்லிக் கொண்டு எம்பெருமான் பாதம்பணிய வேணுமென்கிறாரிவ்வாழ்வார். ‘இன்றளவும் மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து விஷயாந்தரங்களிலே ஆழ்ந்து உண்டியே உடையே உகந்தோடித் திரிந்தவென்னை இன்று உன் திருவடிகளிலே கொண்டு கூட்டினையே!, இதனிலும் மிக்க வுபகாரமுண்டோ?, என் றுபெருநன்றி பாராட்டவேணுமென்பது “பிரானென்றும்” என்பதன் கருத்து. (பிரான் - உபகாரசன்; இங்கே இது ஸம்போதநம்.)

English Translation

"Lord!", "O Good Day!", thus and thus, those who praise you and offer fresh flowers at the feet of your beautiful boar-form will surely see your radiant gem-form and rejoice.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்