விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நீ அன்று உலகு அளந்தாய்*  நீண்ட திருமாலே,* 
  நீ அன்று உலகு இடந்தாய் என்பரால்,*  - நீ அன்று-
  கார் ஓதம் முன் கடைந்து*  பின் அடைத்தாய் மா கடலை,* 
  பேர் ஓத மேனிப் பிரான்.     

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பேர் ஓதம் மேனி பிரான் - பெரிய கடல் போன்ற திருமேனியையுடைய பெருமானே!
நீண்ட திருமாலே - எண்ணுதற்கு அரிய பெருமை படைத்த திருமாலே
நீ - இப்படிப்பட்ட நீ
அன்று - முன்பொருகால்
உலகு - உலகங்களை

விளக்க உரை

எம்பெருமானுடைய சில திவ்ய சேஷ்டிதங்களை நினைந்து வாயாரப் பேசி யேத்துகிறார். திரிவிக்கிரமனாகி உலகளந்தாய்; மஹாவராஹமாகி உலகிடந்தாய்; வங்கக்கடல் கடைந்தாய்; அக்கடலிலே அணைகட்டினாய் என்று மஹர்ஷிகள் கூறுகின்றார்களென்கிறார்.

English Translation

You stretched and took the Earth. O Lord Tirumal They say you lifted the Earth too, churned the ocean and then made a bridge over it! Ocean-hued Lord!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்