- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
கீழிரண்டு பாசுரங்களில் எம்பெருமானுடைய திருமலையிலிருப்பை அநுஸந்தித்த ஆழ்வார் இவ்விடத்தில் தாம் தம்முடைய ஆசைதீர அப்பெருமானோடு பரிமாற வேணுமென்று பாரித்தார்; அர்ச்சாவதாரமாகையாலே அப்படிப்பட்ட பரிமாற்றம் ஒன்றும் பெற்றிலர்; விபவாவதாரங்கள் காலாதீதமாய்ப் போகையாலே இனி பரமபதநாதனோயேயாகிலும் கலந்து பரிமாறப் பெறலாமோ என்று பார்த்துத் தம் திருவுள்ளம் பரமபதத்தளவும் பதறிச் செல்லும்படியைப் பேசுகிறாரிப் பாசுரத்தில். முதலடியில் முடிவிலுள்ள ‘சிந்தை’ என்னுஞ்சொல் எழுவாய் போலத் தோற்றுமாயினும் அஃது எழுவாய் அன்று; பாட்டின் முடிவிலுள்ள மனமே எழுவாய்; சிந்தை அதற்கு விசேஷணமாய் அந்வயிக்கும் எனது மனமானது திருவேங்கட மலையிலே சென்று சேர்ந்து தன் ஆவல் தோற்றும்படி எங்கேயெங்கேயென்று திருமாலைத் தேடி அங்குத் தன் நினைவு தலைக்கட்டப்பெறாமையாலே மிகவும் வளர்ந்து மேற்கிளர்ந்த மனோரகத்தையுடையதாகி மேலேமேலே சென்று திருநாட்டுத் தலைவனைத் தேடியோடா நின்றது; இஃது, அழகிய கொள்கொம்பைத் தேடிக்கொண்டு பரந்து செல்கின்ற கொடியைப் போன்றுள்ளது - என்றாராயிற்று.
English Translation
The heart that longs for the Lord and dwells on his form in vekatam grows like a creeper that seeeks the support of well grown trees, and quickly climbs to touch the moon in the sky.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்