விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வந்தித்து அவனை*  வழி நின்ற ஐம்பூதம்* 
  ஐந்தும் அகத்து அடக்கி ஆர்வமாய்,*  - உந்திப்- 
  படி அமரர் வேலையான்*  பண்டு அமரர்க்கு ஈந்த,* 
  படி அமரர் வாழும் பதி.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

படி அமரர் - நிலத்தேவரான பிராமணர்கள்
வாழும் - நித்யவாஸம் பண்ணுகிற
பதி - திருப்பதியாகிய திருமலையென்பது,
வழிநின்ற - (எம்பெருமானை ஆச்ரயிப்பதற்குத் தடங்கலாய்) குறுக்கே நிற்பனவான
ஐம்பூதம் ஐந்தும் - பஞ்சபூதங்களையும் பஞ்சேந்திரியங்களையும்

விளக்க உரை

கீழ்ப்பாட்டில், “நின்றதுவும் வேயோங்கு தண்சாரல் வேங்கடேமே” என்று திருமலையின் ப்ரஸ்தாவம் வந்ததனால் அத்திருமலையிலேயே இவ்வாழ்வார்க்கு இன்னமும் திருவுள்ளம் அவகாஹித்து அதன் வைலக்ஷண்யத்தை யருளிச் செய்கிறார். இரண்டரை யடிகளால் க்ஷீராப்திநாதனை வருணித்தாராயிற்று. தேவர்கள் ஜிதேந்திரியர்களாய்க் கொண்டு நான் முன்னே நான் முன்னே யென்று ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு வந்து படியுமிடமான திருபபாற்கடலிலே பள்ளிகொள்ளும் பெருமான், இந்நிலவுலகத்தில் ஸ்ரீவைஷ்ணவர்கள் அநுபவித்து வாழுமிடமான திருவேங்கடமலையை நித்யஸூரிகளுக்குத் தந்தான் - என்ற விதன கருத்து யாதெனில்; 1. “தண்ணருவி வேங்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு” என்று திருமழிசைப்பிரானும் ,. “மந்திபாய் வடவேங்கடமாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான்” என்று திருப்பாணாழ்வாரும் அருளிச்செய்தபடியே இத்திருமலை இவ்விபூதியிலுள்ளார்க்கு மாத்திரமேயல்லாமல் அவ்விபூதியிலுள்ள நித்யஸுரிகளுக்கும் எட்டிப் பிடித்தாற்போல் வந்து பணியுமாறு அமைக்கப்பட்ட திருப்பதியாமென்பதே. “சுமந்து மாமலர் நீர்சுடர் தூபங்கொண்டு, அமர்ந்து வானவர் வானவர்கோனொடும், நமன்றெழுந் திருவேங்கடம்” என்ற திருவாய்மொழியுங் காண்க.

English Translation

Venkatam is the holy abode of the Lord worshipped by the celestials and by Vedic seers. Those who subdue their five senses and offer. Worship will become celestials when the five-elements-body is cast, O Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்