விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சென்றது இலங்கைமேல்*  செவ்வே தன் சீற்றத்தால்,*
  கொன்றது இராவணனை கூறுங்கால்,*  -நின்றதுவும்-
  வேய் ஓங்கு தண் சாரல்*  வேங்கடமே,*  விண்ணவர் தம்-
  வாய் ஓங்கு*  தொல் புகழான் வந்து.   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

விண்ணவர் தம்வாய் - தேவர்களின் வாயினால்
ஓங்குதொல் புகழான் - உயர்வாகக் கூறப்படுகின்ற பழமையான புகழையுடைய எம்பெருமான்
செவ்வே - நேராக
சென்றது - சீறிச்சென்றது
இலங்கை மேல் - லங்காபுரியின் மேலாகும்;

விளக்க உரை

“ஈச்வரன் அவதரித்துப் பண்ணின ஆனைத்தொழில்களெல்லாம் பாகவதாபசாரம் பொறாமையென்று ஜீயரருளிச்செய்வர்” என்பது ஸ்ரீவசநபூஷணம் அதாவது - ஸங்கல்பமாத்திரத்தாலே எல்லாவற்றையும் நிர்வஹிக்கவல்ல ஸர்வசக்தியான ஸர்வேச்வரன் தன்னை யழியமாறி மநுஷ்யர்களைப்போன்று அவதரித்துக் கைதொடனாய்நின்று செய்த ராவணாதிநிரஸநரூபமான அதிமாநுஷருத்யங்களெல்லாம் மஹர்ஷிகள் முதலான பாகவதர்திறத்தில் அவ்வவர் பண்ணின அபசாரம் ஸஹியாமையாலே என்று நஞ்சீயரருளிச் செய்வராம் திருவாழி யாழ்வானைக் கூட ஏவாமல் ஸங்கல்பமாத்திரத்தாலே காரியஞ் செய்யவல்லமை எம்பெருமானுக்கிருந்தாலும் ஆச்ரிதர்களுக்காகத் தான் உடம்பு நோவக் காரியஞ் செய்தாலன்றித் தனக்கு த்ருப்தி பிறவாதாகையால் தானே நேரில்வந்து தோன்றிக் கைதொட்டுக் காரியஞ்செய்கின்றானாம். படாதபாடுகள் பட்டு இலங்கையை நோக்கிச் செல்லாமலே “பஸ்மீபவது ராவண:” என்றாற்போன்ற வொரு ஸங்கல்பமாத் கிடத்தாலே இராவணனை நீறாக்கி யொழித்திருக்கலாமே; அப்படியிருக்கவும், வந்து பிறந்து இலங்கையை நோக்கிப் படைதிரட்டிச் சென்றதும் இராவணனைப் போர்க்களத்திலே கொன்றதும் என்னோ?

English Translation

Also He is the Lord eternally praised by the celestials. When he came, he marched over Lanka. When he fought, he killed Ravana. When he stood, it was in the midst of Bamboo thickets in Venkatam.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்