விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அவன் கண்டாய் நல் நெஞ்சே!*  ஆர் அருளும் கேடும்,* 
  அவன் கண்டாய் ஐம்புலனாய் நின்றான்,*  - அவன் கண்டாய்-
  காற்று தீ நீர் வான்*  கரு வரை மண் கார் ஓதச்,*
  சீற்றத் தீ ஆவானும் சென்று.     

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நல்நெஞ்சே - நல்ல மனமே!
ஆர் அருளும் - பரிபூர்ணக்ருபையாலே உண்டாகக்கூடிய மோக்ஷமும்
கேடும் - நிக்ரஹத்தால் வரக்கூடியதான ஸம்ஸாரமும்
கருவரை - கறுத்த மலைகளும்
(அவன் கண்டாய்)  - அவனேயாம்;

 

விளக்க உரை

எம்பெருமான் தன்னை வணங்கினவர்களை வாழ்விப்பனென்று கீழ்ப்பாசுரத்திலருளிச் செய்த ஆழ்வார். அடியே பிடித்து சேதநனுடைய ஸத்தையை நோக்கிக்கொண்டு போருகிற எம்பெருமானுக்கு இஃது ஓரேற்றமே வென்கிறார் போலு மிப்பாட்டால். ஆரளுங் கேடும் அவன்கண்டாய் இந்த ஸம்ஸாரத்தை ப்ரவர்த்திப்பித்தவன் எம்பெருமானேயாதலால் சேதனவர்க்கங்களைக் காக்கவேண்டியதும் அவனுக்குப் பாரமாயிற்று; ஆகவே, கண்ணபிரானே கரணகளேபரங்களைக் கொடுத்து ஸம்ஸாரத்தில் ப்ரவர்த்திப்பித்த அவதாரிகளைத் தன்னுடைய மாயையான ஸம்ஸாரத்தில் நின்றும் மீளச் செய்வானாம் என்றவாறு- மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே” என்று ...... சோதி வாய்திறந்து பணித்ததும் உணர்க.

English Translation

O Devoted heart! The good and the bad-know that all this is he. The Earth, wind, fire, water and space, -these too are he. He stands as the five senses also.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்