விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அரியது எளிது ஆகும்*  ஆற்றலால் மாற்றிப்*
  பெருக முயல்வாரைப் பெற்றால்,*  - கரியது ஓர்-
  வெண் கோட்டு மால் யானை*  வென்றி முடித்தன்றே,*
  தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து?      

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பெருக முயல்வாரை - மிகவும் உத்ஸாஹங் கொண்டிருக்கின்ற மஹாபுருஷனான எம்பெருமானை
பெற்றால் - கிடைக்கப்பெற்றால்
அரியது - செய்வதற்கு அருமையான செயலும்
மால் - பெரிய
கரியது ஓர் யானை - கருநிறமுள்ள கஜேந்திராழ்வான்

 

விளக்க உரை

எம்பெருமான் ஸர்வசக்தனென்பதை யறிந்து கொண்டு, அப்படி ஸர்வசக்தனான அவனே நம்முடைய பாரங்களைத் தன் தலைமீது ஏற்றுக்கொண்டு நமக்காகவேண்டிய ஸகலகாரியங்களையுஞ் செய்து தலைக்கட்டத்தானே உத்ஸாஹங் கொண்டிருக்கிறானென்பதையறிந்து அவனுடைய ப்ரவ்ருத்திக்கு விலக்கான நம்முடைய ப்ரவ்ருத்தியை நிறுத்திக்கொள்வோமாயின் நமக்குப் பெறமுடியாத தொன்றுமில்லை, எல்லாம் எளிதேயாம்; இதற்கு உதாஹரணமுங் காண்மின்; முதலையின் வாயிலகப்பட்ட கஜேந்திராழ்வான் தனது சக்தியைக்கொண்டு அவ்வாபத்தைப் போக்கிக்கொள்ள நினைத்துத் தானாக முயற்சிசெய்து கொண்டிருந்தவரையில் துன்பம் நீங்கப்பெற்றதில்லை; ‘தன்னாலானமட்டும் ஒரு கை பார்க்கட்டும்’ என்று எம்பெருமான் விலகியே நின்றான்; இனி நம்மாலாகாதென்று துணிந்து ஸ்வப்ரவ்ருத்தியைவிட்டு ‘ஆதிமூலமே!’ என்றழைத்த பின் தன்காரியமாகக் கொண்ட எம்பெருமான் அரைகுலையத் தலைகுலைய மடுவின்கரையிலே ஓடிவந்து வினைதீர்த்தொழித்தானன்றோ. ஆற்றலால் மாற்றிறப் பெருக முயல்வாரைப் பெற்றால் அரியது எளிதாகும் - ஆற்றலாவது சக்தி; எம்பெருமானுடைய சக்தியைச் சொன்னபடி, மாற்றி - சேதகனுடைய ப்ரவ்ருத்திகளை விலக்கி என்றபடி. சேதநன் தன்னுடைய முயற்சியை நீக்கிக்கொண்டு எம்பெருமானுடைய சக்தியே ஓங்கும்படி நின்றால் அரிய காரியமும் எளிதாக முடியுமென்பது தேர்ந்த கருத்து. ஈற்றடியிலுள்ள ‘கோடு’ என்னுஞ் சொல் நீர்க்கரையென்னும் பொருளது. “தண் தோட்டு மாமலரால்” என்றும் பாடமுண்டாம்; தோடு - அகவிதழ்; மலர்க்கு விசேஷணம்.

English Translation

The impossible becomes possible when refuge is sought in the Lord who corrects by force and accepts with love,. The strong elephant battling for life in the waters attained his desire when he offered flowers and bowed low.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்