விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தாம் உளரே*  தம் உள்ளம் உள் உளதே*  தாமரையின்-
  பூ உளதே*  ஏத்தும் பொழுது உண்டே,*  - வாமன்-
  திரு மருவு*  தாள் மருவு சென்னியரே,*  செவ்வே-
  அரு நரகம் சேர்வது அரிது.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

திரு மருவுதாள் - அழகிய திருவடிகளை
மருவு - பணிவதற்குப் பொருத்தமான
சென்னியரே - தலையையுடையவர்களாக இருக்கின்றார்களே;
செவ்வே - நேராக
அருநரகம் - கொடிய நரகத்தை

 

விளக்க உரை

முதல் திருவந்தாதியில் “நாவாயிலுண்டே நமோநாராணாயவென்று ஓவாதுரைக்கு முரையுண்டே, மூவாத மாக்கதிக்கண் செல்லும் வகையுண்டே என்னொருவர் தீக்கதிக்கண் செல்லுந்திறம்”(9”) என்ற பாசுரத்தின் கருத்தைப் பெரும்பாலும் தழுவியதாமிப்பாசுரம். எம்பெருமானை ஏத்துவதற்கு ஏற்ற ஸாமகரிகள் குறைவற்றிருக்கச் செய்தேயும் இவ்வுலகத்தவர் விலக்கடி தேடிக்கொண்டு நரகத்திற்சென்று சேருகின்றார்களே! இஃது என்னோ! என்று வயிறெரிகிறார். “ஜிஹவே! கீர்த்தய கேசவம் முரரிபும்” என்ற முகுந்தமாலை ச்லோகத்திற் சொல்லுகிறபடியே எம்பெருமானைப் பணிவதற்கு ஏற்ற கரசரணாதி அவயங்களோடு கூடியிருக்கின்றார்களே; இனி புதிதாகத் தங்களைத் தாம் ஸ்ருஷ்டிபண்ணிக் கொள்ள வேண்டியதில்லையே; எல்லாவற்றிறுக்கும் மூலகாரணமான நெஞ்தானும் வெளியிற் சென்று தேடவேண்டாதபடி உள்ளே அமைந்து கிடக்கின்றதே; அர்ச்சிப்பதற்கு உரிய தாமரை மலர்கள் தடாகங்கள்தோறும் மலிந்து கிடக்கின்றனவே; ‘போதுபோகவில்லை; போதுபோகவில்லையே’ என்று பாழும் ஸம்ஸாரிகள் தவிக்க வேண்டும்படி பொழுதும் ஏராளமாகவுண்டே பகவானைத் துதிப்பதற்கு; தலைபடைத்த ப்ரயோஜனம் பெற அவனை வணங்கலாமே; இப்படி ஒன்றாலொன்று குறையின்றியிருக்க, இவர்கள் நித்ய ஸம்ஸாரிகளாகவேயிருக்க வழிதேடுவது என்ன கேடுகாலமோ வென்றவாறு, “நாராயணேதி சப்தோஸ்தி வாகஸ்தி வசவர்த்தி நீ- ததாபி நரகே கோரே பதந்தீதி கிமத்புதம்” என்ற புராண ச்லோகமும் இப்பாட்டுக்கு ஒரு புடை சார்பாக அநுஸந்திக்கத்தகும்.

English Translation

You have devotees here. They have pure hearts. Lotus blooms everywhere. There is leisure for worship. There are heads that desire the adorable manikin feet, with all this, entering hell is impossible.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்