விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பழி பாவம் கையகற்றி*  பல் காலும் நின்னை,*
  வழிவாழ்வார் வாழ்வராம் மாதோ,* - வழு இன்றி-
  நாரணன் தன் நாமங்கள்*  நன்கு உணர்ந்து நன்கு ஏத்தும்,*
  காரணங்கள் தாம் உடையார் தாம்.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பழி - அபகீர்த்தியையும்
பாவம் - பாவங்களையும்
கை அகற்றி - நீக்கி
பல்காலும் - எப்போதும்
நின்னை - உன்னை

விளக்க உரை

இப்பாட்டுக்கு இரண்டு வகையான நிர்வாஹங்களுண்டு : உபாயாந்தர நிஷ்டர்களெனப்படுகிற உபாஸகர்களை முன்னடிகளிலும், அநந்யோபாயரான ப்ரபந்தர்களைப் பின்னடிகளிலுங்குறிப்பதாகக்கொண்டு, இவ்விருவகையதிகாரிகளும் எம்பெருமானையே உபேயமாகப் பெறுபவராதலால் வாழ்ச்சி பெற்றவராவர் என்பதாக ஒரு நிர்வாஹம். அன்றியே; வழுவின்றி நாரணன்றன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்துங் காரணங்கள் தாமுடையராகிப் பழிபாவங் கையகற்றிப் பல்காலும் நின்னை வழிவாழ்வார் வாழ்வராம் - என்று ஒரே வாக்கியார்த்தமாக அந்வயித்து ஒருவகை யதிகாரிகளைப் பற்றியே இப்பாசுரம் கூறுவதாக நிர்வஹிப்பதும் ஒரு புடையுண்டு. தாங்கள் அறியாதிருக்கப் பிறர் ஏறிடும் அபகீர்த்தி பழியெனப்படும்; தாங்களே புத்தியறிந்து செய்யும் பரஹிம்ஸை முதலியவை பாவமெனப்படும்; இவ்விரண்டுக்கும் தங்களிடத்தில் அவகாசம் கொடாமல் : எப்போதும் பகவந்நாமங்களையே அநுஸந்தித்து ஏத்திக் கொண்டிருக்கும்படியான ருசி விச்வாஸங்களையுடையவர்கள் வாழ்வார் என்றதாயிற்று. மாதோ - அசை, இடைச்சொல்லுமாம். ஈற்றடியின் முதற்பதம் மோனையின் பத்திற்கிணங்க ‘தாரணங்கள்’ என்றிருக்கலா மென்றுகொண்ட பெரியவாச்சான் பிள்ளை அப்படியும் ஒரு மாடமருளிச் செய்கிறார். “தாரணங்கள் தாமுடையாரென்ற போது த்ருதியுடையாரென்றபடி.” என்பது வியாக்கியானம். ‘தாரணம்’ என்ற வடசொல் திரிந்ததென்க. மனவுறுதியைச் சொன்னபடி இனி ‘தாரணம்’ என்னும் வடசொல்லே வந்ததாகக் கொண்டால் உஜ்ஜீவநோபாயம் என்பது பொருளாம்.

English Translation

Giving up wrong ways, O Madava, devotees who worship you everyday without fail, -reciting your Narayana Mantra with understanding and faith, -have access to the good life with you.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்