விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வழக்கு அன்று கண்டாய்*  வலி சகடம் செற்றாய்,* 
    வழக்கு என்று நீ மதிக்க வேண்டா,* - குழக் கன்று-
    தீ விளவின் காய்க்கு எறிந்த*  தீமை திருமாலே,* 
    பார் விளங்கச் செய்தாய் பழி.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வலி சகடம் - வலிதான சகடத்தை
செற்றாய் - உதைத்து முறித்துத் தள்ளினாய்;
வழக்கு அன்று கண்டாய் - இது உனக்குத் தகுதியன்று காண்;
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா - இது நமக்குத் தகுந்ததேயென்று  நினைக்கலாகாது;

விளக்க உரை

நந்தகோபார் திருமாளிகையிலே ஒரு வண்டியின் கீழ்ப்புறத்திலே ஒரு தொட்டிலில் தான் கண்வளரும்போது கம்ஸனாலேவப்பட்ட அஸுரனொருவன் அந்த வண்டியில் ஆவேசித்துத் தன்மேல் விழுந்து தன்னைக்கொல்ல முயன்றபோது அதனையறிந்த தான் பாலுக்கு அழுகிற பாவனையிலே தான் சிறிய திருவடிகளை மேலேதூக்கி யுதைத்து அச்சகடத்தை யொழித்தருளினது தன்னைத்தான் காப்பாற்றிக்கொடுத்து உலகத்தை வாழ்விக்கச் செய்த செயலாகிலும், ஸுகுமாரமான கைபடைத்த பிராட்டிமார்களும் தொட்டுப் பிடிக்கப் கூசும்படி அத்தனை ஸுகுமாரகவுள்ள திருவடியைக் கொண்டு ஒரு முரட்டு வண்டியை உதைத்த விது மிகவும் தகுதியற்ற காரியமென்று தோற்றுவது மங்களாசாஸநபரர்களுக்கு ஸஹஜமாதலால் ‘வலிசகடம் செற்றது வழக்கன்று’ என்கிறார் முன்னடிகளில்.

English Translation

O Lord Tirumali you wrecked a cart with your petal-soft feet, that was not fair, you swirled a demon-calf and dashed it against a demon wood-apple free, do not think that was fair either. In the eyes of the world you did wrong.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்